ஆரோக்கியம் மிகுந்த அதிகம் அறியப்படாத அற்புதப் பழங்கள் பத்து!

காமரங்கா பழம்
காமரங்கா பழம்
Published on

ந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு, பலன் தரும் பழ மரங்களிலிருந்து பெறப்படும் சில வகைப் பழங்களையும் அவை தரும் ஊட்டச்சத்துக்களின் விவரங்களையும் அறியாமல் பலரும் இருந்து வருகிறோம். அவ்வாறான அரிய வகைப் பழங்களில், பத்து வகைப் பழங்களைக் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

காமரங்கா (Kamaranga) எனப்படும் ஸ்டார் ஃபுரூட்டானது இந்தியாவிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட பழம் இது. இதில் வைட்டமின்C, நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ளன.

ராம்புடான் (Rambutan) என்ற பழம் இந்தியாவின் தென் பகுதிகளில் காணப்படுவது. இனிப்புடன் கூடிய சுவையான சாற்றை கொண்டது. இதை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது மற்ற பழத்துண்டுகளுடன் கலந்து டெஸர்ட்டாகவும் உண்ணலாம்.

கோகும் (Kokum) இது இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கிடைக்கும் புளிப்பு சுவை கொண்ட பழம். இதை புத்துணர்வு தரும் பானமாகவும், கறி சமைக்கும்போது அதனுடன் சேர்த்து சமைத்தும் உண்ணலாம்.

மங்குஸ்தான் பழம்
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் (Mangosteen) பழம் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் அடங்கிய ஒரு சூப்பர் பழ உணவு. இதன் ஓட்டை சுலபமாகப் பிரித்தெடுத்து, உள்ளிருக்கும் சாத்துக்குடி சுளைகள் வடிவ, இனிப்புச் சாற்றுடன் கூடிய வெள்ளை நிற சதைப் பாகத்தை சாப்பிடுவது ஒரு வேறுபட்ட அனுபவம் தரும்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மாநிலங்களில் கோடை  காலங்களில் அதிகமானவர்களால் உண்ணப்படுவது நுங்கு. இது, 'ஐஸ் ஆப்பிள்' எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. குறைந்த அளவு கலோரி கொண்டது.

கஃபால் (Kafal) பழம் இமயமலைப் பகுதிகளில் பெர்ரி வடிவில் கிடைக்கக் கூடிய ஒரு சிறு பழம் ஆகும். ஆங்கிலத்தில் இதை, 'Bay Berry' எனப்படுகிறது. சிவப்பு அல்லது பர்ப்பிள் நிறம் கொண்டது. இனிப்பும் லேசான கசப்பு சுவையும் கொண்டது இந்தப் பழம்.

கரோன்டா (Karonda) என்ற பழம் பெர்ரி வடிவில், பச்சை அல்லது சிவப்பு நிறம் கொண்ட சிறு பழம். இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் காணப்படுவது. புளிப்பு சுவையுடைய இப்பழத்தைக் கொண்டு ஊறுகாய் மற்றும் சட்னி செய்து உண்ணலாம்.

பிலிம்பி பழம்
பிலிம்பி பழம்

பிலிம்பி (Bilimbi) எனப்படும் இப்பழம் இந்தியாவில் பல இடங்களில் கிடைக்கக் கூடியது. பச்சை நிறத்துடன் புளிப்பு சுவை கொண்டது. லேசான அமிலத்தன்மையும் உடையது. அதிகளவு வைட்டமின்C, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ள பழம் இது.

பல்ஸா (Phalsa) என்ற சிறிய வடிவம் கொண்ட இப்பழம், இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் கிடைப்பது. புதர் போன்ற இடங்களில் வளரும். சர்பத் மற்றும் ஜாம் செய்யப் பயன்படுகிறது. லேசான கசப்பு சுவை கொண்டது.

இதையும் படியுங்கள்:
ஏழு வகை தினை உணவுகளும் (Millet) ஏராளமான பயன்களும்!
காமரங்கா பழம்

'Wood Apple' என்றும் அழைக்கப்படும் விளாம்பழம், நோயெதிர்ப்புச் சக்தி உள்ளிட்ட அநேக ஊட்டச் சத்துக்கள் தரக்கூடியது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. அநேகமாக காட்டுப் பகுதிகளில் வளர்வது.

இதுபோன்ற அபூர்வ பழங்களைத் தேடிப் பிடித்து வாங்கி உண்டு புதிய அனுபவம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com