தயிருடன் வாழைப்பழம் சேர்த்து உண்பது தரமான தாம்பத்தியத்துக்கு உதவுமா?

தயிர், வாழைப்பழம்
தயிர், வாழைப்பழம்
Published on

பொதுவாக, தயிரையும் வாழைப்பழத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்த்தால் அவை இரண்டிலுமே ஊட்டச் சத்துக்கள் அதிகமாக உள்ளன. வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் தாம்பத்திய வாழ்க்கை இயற்கையாகவே மேன்மையுறும். வாழைப்பழத்தில் B வைட்டமின்கள் அதிகம். இவை உடலில் சக்தியின் அளவை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறையச் செய்யவும் உதவும். இந்த இரண்டு நன்மைகளும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவி புரியும்.

மேலும், B வைட்டமின்களில் புரோமெலைன் (Bromelain) என்றொரு என்சைம் உள்ளது. இது ஆண்களின் லிபிடோ (Libido) அளவை அதிகரிக்கவும் ஆண்மையின்மையைக் குறையச் செய்யவும் உதவும். வாழைப்பழத்தில் உள்ள அதிகளவு டயட்டரி நார்ச்சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுவதோடு, மொத்த குடல் இயக்கங்களையும் எந்தவித கோளாறுமின்றி இயங்கச் செய்கின்றன. இப்பழத்திலுள்ள கார்போஹைட்ரேட் சத்துக்கள் உடலுக்கு உடனடி சக்தி அளிக்க உதவுகின்றன. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும். அதன் மூலம் இதய ஆரோக்கியம் காக்கப்படும்; ஸ்ட்ரோக் வரும் அபாயம் தடுக்கப்படும்.

தயிரில் உள்ள புரோபயோட்டிக்ஸ் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும், குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று ஊட்டச் சத்துக்கள் முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்படும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
கந்த சஷ்டி கவசத்தின் வரலாறு தெரியுமா?
தயிர், வாழைப்பழம்

இது மறைமுகமாக தாம்பத்திய ஆரோக்கியத்துடன் தொடர்பு ஏற்படவும் உதவுகிறது. தயிரில் புரோட்டீன் சத்து அதிகம். இது உடலில் ஸ்டெமினா, தசைகளின் ஆரோக்கியம் மற்றும் தாம்பத்திய செயல்பாடுகளுக்கு நன்கு உதவி புரியும். தயிரில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D எலும்புகளை வலுவடையச் செய்யும்.

தயிர் மற்றும் வாழைப்பழம் இவ்விரண்டு உணவுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது சரியான விகிதத்தில் உடலுக்கு கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் மினரல்களை வழங்க முடியும் என நம்பப்படுகிறது.

இவ்விரண்டையும் தனித்தனியாக உட்கொள்ளும்போது, இரண்டு உணவுகளும் ஜீரணம் சிறப்பாக நடைபெறவும், சக்தியின் அளவை அதிகரிக்கவும், கூடுதல் ஸ்டெமினா தந்து மொத்த உடல் நலனைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. மொத்தத்தில் இந்த இரண்டு உணவுகளுமே உடலின் பொதுவான ஆரோக்கியத்திற்கும் தாம்பத்திய வாழ்க்கைக்கும் பெரிதும் உதவி புரிபவைகளாகவே உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com