
முன்னோர்கள் வழிபட்ட மரங்ஙளுள் அரச மரமும் ஒன்று. வேம்பை பெண் தெய்வமாகவும் அரசமரத்தை ஆண் தெய்வமாக வணங்குவார்கள். அரசமரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும். புத்தர் அரசமரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக அறிகிறோம். போதிமரம் என்பது அரசமரம்தான். அரச மரம் குலம் தழைக்கச் செய்யும். சூலத்தை சீராக்கும். அரசமரத்தின் காற்று கருப்பை கோளாறுகளைத் போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி மன அமைதியைக் கொடுக்கும் தன்மையும் உண்டு. இதற்கு அர்த்தம், போதி, கணம், சராசனம் என பல பெயர்கள் உண்டு.
நன்கு வளர்ந்த மரம் நாளொன்றுக்கு 1808 கலோரி அமிலவாயுவை உள்வாங்கி 2400 பிராணவாயுவை வெளியிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த பிராணவாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இதை சுற்றிவரும் போது நாளமில்லசுரப்பிகளின் செயல்பாடுகள் தூண்டப்படுவதாக கூறுகின்றனர்.
இதன் இலைகளின் கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைகத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுவாவதுடன் காய்ச்சல் குறையும். வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றைப் பாலில் கொதிக்க வைத்து ஆறிய பின் தேன்கலந்து தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வர தாது விருத்தியடையும். அரச விதைகளைகாயவைத்து பொடியாக்கி தினமும் பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.
அரச மரம் பட்டையை சிதைத்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்த சொறி சிரங்கு குறையும் உடல் வெட்டை தீரும். சருமம் பளபளப்புடன் சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.
அரசமரம் பட்டையை பொடியாக்கி புண்களில் தடவ விரைவில் அவை குணமாகும் அரசமரப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண்கள் குணமாகும். வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவ வெள்ளைப் படுதல் குணமாகும். இதன் பட்டை வேர் விதை இவற்றை இடித்து பொடியாக்கி கஷாயம் தயாரித்து அருந்த மாதவிலக்கு பிரச்னைகள் தீரும். அரசமரம் பாலை எடுத்து பாத வெடிப்புகளில் பூச அவை மறையும். அதிக அளவு ஆகாசிஜன் உற்பத்தி செய்யும் மரம் அரசமரம்.