அதிக மனக்கவலையின் பரிசு உடல் பருமன்; எப்படித் தெரியுமா?

மனக்கவலையோடு பெண்
மனக்கவலையோடு பெண்https://www.spandanapsychiatriccentre.com
Published on

ந்த உலகில் கவலை இல்லாத மனிதனே கிடையாது. ஆனால், கவலையின் தாக்கம் அதிகமாகும்போது அது உடலில் பலவித மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமான ஒன்று உடல் பருமன். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கார்டிசால் அதிகரித்தல்: கவலைப்படும் நபர்களுடைய உடலில் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் சுரக்கும். அது பசியை அதிகப்படுத்தும். உடலில் எடையை கூட்டும். அதிலும் குறிப்பாக அடிவயிற்றை சுற்றியுள்ள பகுதிகளில் எடையைக்  கூட்டும்.

2. உணர்ச்சிபூர்வமாக உண்ணுதல்: கவலைப்படும் நபர்கள் தங்கள் கவலையை மறப்பதற்கு ஈடுபடும் செயல் அதிகமாக உண்ணுவது. தங்களுடைய ஸ்ட்ரெஸ்ஸை குறைப்பதாக நினைத்துக் கொண்டு அதிக கலோரி உள்ள இனிப்புப் பொருட்கள் மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுப் பொருட்களை அதிகமாக உண்பார்கள். அது எடை கூடுவதற்கு வழிசெய்யும்.

3. பசி மாறுபாடு: அவர்கள் வயிறு நிறைய உண்டாலும் அவர்கள் மனதில் இருக்கும் கவலை அவர்களுக்கு அடிக்கடி பசியைத் தூண்டும். அதனால் மீண்டும் மீண்டும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதற்கு அவர்கள் தூண்டப்படுகிறார்கள்.

4. திணறும் மெட்டபாலிசம்: கார்டிசால் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால் அது உடலின் மெட்டபாலிசத்தை சரியாக வேலை செய்ய விடாமல்  தடுக்கிறது. உடலில் உள்ள கலோரிகளை எரிக்க மிகவும் சிரமப்படுகிறது. அதனால் எரிக்கப்படாத கலோரிகள் உடலில் தங்கி பருமனாக மாறிவிடும்.

5. கொழுப்பு: கார்டிசால் மற்றொரு வேலையை கச்சிதமாக செய்கிறது. அதுதான் உடலில் கொழுப்பை தக்க வைப்பது. கவலையாக இருக்கும் நபர்கள் அதிக அளவில் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது அவற்றை கொழுப்பாக மாற்றி அடிவயிற்றில் டெபாசிட் செய்ய வைத்து விடுகிறது. மேலும், முழு உடலிலும் எடையை அதிகரிக்கிறது.

6. குறைந்த உடல் செயல்பாடு: கவலைப்படும் நபர் மிக விரைவில் களைப்படைந்து விடுவார். அடிக்கடி விரக்திக்கு ஆளாவார். மேலும், அதிகளவில் உண்பதால்  ஓடியாடி வேலை செய்ய முடியாது. உடல் இயக்கம் குறைவதால் உடல் எடை கூடுகிறது.

7. ஒழுங்கற்ற தூக்கம்: மன அழுத்தத்தில் ஆழ்ந்து விடும் மனிதர்களுக்கு தூக்கமும் எட்டாக்கனியாகும். தூங்கும் பழக்கத்தை கவலை மாற்றிவிடும். மிகக் குறைந்த அளவே தூங்குவார்கள். அல்லது அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்து கொள்வார்கள். இது உடலின் ஹார்மோனல் சமநிலையை பாதிக்கிறது. இரவில் விழித்திருப்பதால் பசியை தூண்டுகிறது. தேவையில்லாத உணவு பண்டங்களை உண்ணும்படி ஆணையிடுகிறது.

இதையும் படியுங்கள்:
குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!
மனக்கவலையோடு பெண்

8. இன்சுலின் எதிர்ப்பு: நாள்பட்ட மன அழுத்தம் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இது உடலில் கொழுப்பை சேர்த்து வைப்பதை எளிதாக்குகிறது. உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்த பின்பு உடனடியாகக் குறைப்பது கடினமான காரியமாகிவிடும்.

9. க்ரெலின் அளவுகள் அதிகரிப்பது: அதிக மன அழுத்தத்தில் இருக்கும் நபருக்கு பசியை தூண்டும் ஹார்மோனான க்ரெலினின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால்  அடிக்கடி இவர்களுக்கு பசி எடுக்கும். அதனால் நிறைய சாப்பிட்டு விடுவார்கள்.

10. தேவையானதை விட அதிகளவு உணவு: மன அழுத்தம் கவனச் சிதறலுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், சாப்பிடுவதைப் பற்றி அக்கறையோ அதிகமாக உண்கிறோம் என்கிற உணர்வையோ அவர்களுக்கு ஏற்படுத்தாது. தங்கள் உடலுக்கு தேவையானதை விட அதிக அளவு கலோரியுள்ள உணவு வகைகளை  அதிகமாக உண்டு விடுகிறார்கள்.

கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு அவற்றை குறைத்து விட்டால் ஒருவரால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com