

தூக்கத்தில் இருக்கும்போது நாம் செயலற்ற நிலையில் இருப்பதாக அர்த்தமில்லை. அப்போதுதான் நம் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. அந்நேரம் நம் உடலும், மனமும் ஒன்றுக்குடன் பழுதுபார்ப்பு (repair) அல்லது புதுப்பொலிவுக்கு (Renewal) உட்படுகின்றன.
இப்படி அந்த 8 மணி நேர இரவு தூக்கத்தின் போது உடல் லேசான தூக்கம், ஆழ்ந்த தூக்கம், REM (கனவு) தூக்கம் என தொடர்ச்சியான சுழற்சிகள் வழியாக நகர்கிறது. இறுதியில் கடந்துபோகும் ஒவ்வொரு மணி நேரமும் ஆரோக்கியத்திற்குத் தனித்துவமான பங்களிக்கிறது. அது என்னென்ன நன்மைகள்?
1 முதல் 4 மணி வரை என்ன நடக்கிறது?
முதல் இரண்டு மணி நேரத்தில் லேசான தூக்கம் (Sleeping) நம் உடலால் உணரப்படுகிறது. இந்த நிலை இதயத் துடிப்பைக் குறைக்கவும், தசைகளைத் தளர்த்தவும், உடலை ஆழமான ஓய்வுக்குத் தயார்படுத்தவும் உதவுகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது மணி நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தை அடைவோம்.
இங்கு வளர்ச்சி ஹார்மோன் (growth hormone) வெளியிடப்படுகிறது, திசுக்கள் (tissues) பழுது பார்க்கப்படுகின்றன, நோயெதிர்ப்பு அமைப்பும் வலுவடைகிறது. இந்த மணி நேரங்களில் ஆழ்ந்த தூக்கத்தைத் தவறவிட்டால் உடலை சோர்வடையச் செய்யலாம், நல்ல மாற்றங்களைக் குறைக்கலாம் (impair healing), நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்தலாம்.
5 முதல் 6 வது மணி நேரங்களில்...:
அடுத்த ஐந்து, ஆறு மணி நேரத்திற்கு இடையில் REM(Rapid Eye Movement) தூக்கம் தீவிரமடைகிறது. அப்போதுதான் தெளிவான கனவுகள் தோன்றும். கனவு காண்பது என்பது நாம் ஆழ்ந்த தூக்கத்தை இழக்கிறோம் என்று அர்த்தமல்ல. மாறாக நம் மூளை உணர்ச்சிகளை(emotions), நினைவுகளை(memories), கற்றதைச்(Learned) செயல்படுத்தி பார்த்திருக்கும். இருப்பினும் அந்நேரத்தில் போதுமான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் வெறும் REM மட்டும் ஆதிக்கம் செலுத்தினால், நாம் மனரீதியாக(mentally) புத்துணர்ச்சியுடன் உணரலாம். ஆனால், உடல்(physically) ரீதியாக சோர்வாக உணரலாம்.
7 முதல் 8 மணிநேரங்களில்...:
இறுதி இரண்டு மணி நேரங்களில் லேசான தூக்கமும், REMமும் சமநிலையாக காணப்படுகின்றன. இந்த நிலையில் நமக்குத் தேவையான நினைவாற்றல் ஒருங்கிணைக்கப்படுகிறது (fine-tune memory consolidation). இறுதியில் உடலை காலையில் இயற்கையாகவே விழித்தெழுவதற்குத் தயார்படுத்துகிறது. இதற்கு முன்னரே எழும்புவது அல்லது தூங்காமல் இருந்தால் நமக்கு சோம்பல் உணர்வு, மோசமான கவனம் செலுத்துதலுக்கு வழிவகுக்கிறது.
பகல் நேர தூக்கம் கைகொடுக்குமா?
8 மணி நேர பகல் நேரத் தூக்கத்தாலும் இதேபோன்ற சுழற்சிகளை வழங்க முடியும் என்றாலும், அது குறைவான செயல்திறன் கொண்டதாகவே (less efficient) இருக்கும். காரணம் சூரிய ஒளி தூக்கத்திற்குத் தேவையான மெலடோனின்(melatonin) உற்பத்தியைச் சீர்குலைக்கிறது. பகல் நேர வெளிப்புறச் சத்தம் அதிகமாக எழக்கூடும். சர்க்காடியன் தாளங்கள் (circadian rhythms) தவறாக சீரமைக்கப்படுகின்றன. இதனால் பகல் நேர தூக்கம் இரவு நேரத் தூக்கத்தைவிட உடலுக்கு அரிதான (rarely) மறுசீரமைப்பு நன்மைகளைத் (restorative benefits)தான் வழங்குகிறது.
சுருக்கமாகப் பார்த்தால் இப்போதெல்லாம் பலரும் பல காரணங்களால் தூக்கத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் கண்டிப்பாக அவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். எனவே, அதுபோல் இந்தத் தூக்கத்திற்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்து உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)