ரத்த தானம் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள்! 

Blood Donation
The Remarkable Health Benefits of Blood Donation

ரத்த தானம் என்பது ஒரு மிகச்சிறந்த செயலாகும். இதன் மூலமாக பிறரது உயிரையும் நாம் காப்பாற்றுகிறோம், அதே நேரம் நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறோம். நீங்கள் எப்போதாவது ரத்ததானம் செய்ய முடிவு செய்தால், அது பிறருக்கு உதவும் என்பதற்கு அப்பால் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

ரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: 

ரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து குறைகிறது. அதிகப்படியான இரும்புச்சத்து காலப்போக்கில் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகும். எனவே ரத்த தானம் செய்வதன் மூலம் அதீத இரும்புச் சத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். 

ரத்த தானம் உங்களது இருதய செயல்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த தானம் செய்யும்போது உங்கள் உடல் இழந்த ரத்தத்தை புதிதாக உற்பத்தி செய்கிறது. இந்த செயல்முறை எலும்பு மஞ்சையைத் தூண்டி புதிய சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மை குறைந்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் குறைகிறது. 

உங்கள் உடலில் புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியானது ரத்த தானம் செய்வது மூலமாக தூண்டப்படுகிறது. இந்த செயல்முறை உங்கள் ரத்தத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால் நீங்கள் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பைப் பெறுவீர்கள். 

ரத்த தானம் செய்வதற்கு முன் உங்களை சுகாதார பரிசோதனை செய்வார்கள். இது முற்றிலும் இலவசம் என்பதால், ரத்த அழுத்தம் நாடித்துடிப்பு ஹீமோகுளோபின் அளவு போன்றவற்றை தெரிந்து கொண்டு வேறு ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை இலவசமாகவே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

எண்டோர்பின் எனப்படும் நல்ல உணர்வு ஹார்மோனானது ரத்த தானம் செய்வதால் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன் உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. 

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஒவ்வொரு முறை நீங்கள் ரத்த தானம் செய்யும் போதும் சுமார் 650 முதல் 750 கலோரிகளை எரிக்கிறீர்கள். இது ஓரளவுக்கு உங்களது உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். 

இதையும் படியுங்கள்:
ரத்த சர்க்கரையைக் குறைக்க வேண்டுமா? கிராம்பு இருக்க பயம் எதற்கு?
Blood Donation

தொடர்ச்சியாக ரத்த தானம் செய்வது மூலமாக அதிகப்படியான இரும்பின் அளவு, கல்லீரல் நோய், இதய நோய் மற்றும் சில வகை புற்று நோய்கள் போன்ற நிலைமைகளின் அபாயம் குறைவதாக சொல்லப்படுகிறது. எனவே ரத்ததானம் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைஙக் கருத்தில் கொண்டு, குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்த தானம் செய்வது பிறருக்கும் உங்களுக்கும் நன்மை பயக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com