

நம் உடலானது பலவித நரம்புகளாலும், தசைகளாலும் இயங்குகிறது. உடலில் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் கை விரல்களுக்கு (Fingers) பயிற்சி அளிப்பதன் மூலம் சரிசெய்யலாம் என நிபுணர்கள் ஆய்வு செய்து சொல்லியுள்ளனர்.
கட்டை விரல்
நம் கட்டை விரலும் மற்ற விரல்களுடன் இணைந்து அனைத்து வேலைகளையும் செய்ய உதவுகிறது. இதில் அழுத்தம் கொடுத்து சில பயிற்சிகளை செய்ய மன அழுத்தம் குறையும். மனநிலையை கட்டுப்படுத்த முடியும். நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இந்த கட்டை விரலில் செய்யும் இந்த பயிற்சியானது உடனடி சக்தியை தர உதவுகிறது.
கட்டை விரலானது மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புகள் கொண்டது. இது வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்
ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்து வர நம் பயம், சோர்வு குறையும் என்கிறார்கள். இந்த விரல் பயிற்சி சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும். நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
நடுவிரல்
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்து வர நம் கோபம் குறைய உதவும். ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்க உதவுகிறது. நடுவிரலானது கல்லீரல் மற்றும் பித்த பையுடன் இணைப்புடையது. இந்த பாகங்களின் வலிமை யை மேம்படுத்துகிறது. உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிர விரல்
நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நாம் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம். மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால் நம் உடற்சக்தி மேம்படும்.
சிறு விரல்
சிறு விரலுக்கு பயிற்சி கொடுத்து அழுத்தம் கொடுத்து செய்ய இதயம் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் பாகங்களின் செயல் திறனை ஊக்குவிக்கிறது. மூளையின் செயல்திறன் மேம்படுத்தலாம். நம் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
இவ்வாறு விரல்களுக்கு தகுந்த பயிற்சியாளர் கொண்டு முறைப்படி கற்றுக் கொண்டு விரல் அழுத்த பயிற்சி செய்து வர நல்ல பலன்களை பெறலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)