சரும ஆரோக்கியத்தில் வைட்டமின்களின் பங்கு!

The role of vitamins in skin health!
The role of vitamins in skin health!https://www.onlymyhealth.com

ருவரின் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது உடலில் உள்ள வைட்டமின் சத்துக்களே. ஒவ்வொரு வைட்டமினுக்கும் சருமத்தை ஒவ்வொரு விதமாக பராமரிக்கும் சக்தி  உள்ளது.

வைட்டமின் பி: இது வறண்ட சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. சருமம் மென்மையாக இருக்க உதவுகிறது. மணத்தக்காளி கீரை, கைக்குத்தல் அரிசி, கோதுமைத் தவிடு, வாழைப்பழம், பால் பொருட்கள், முட்டை, பட்டாணி, சோயா பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் ஏ: சரும சுருக்கத்தைப் போக்கி மேனியை பொலிவுடன் வைக்க வைட்டமின் ஏ உதவுகிறது. இது முகப்பருவைத் தடுக்கிறது. ‌வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை அடைவதைத் தடுக்கிறது. கேரட், பப்பாளி, மஞ்சள் பூசணி, வாழை, கருவேப்பிலை, புதினா, முருங்கை கீரை, பசலைக்கீரை ஆகியவற்றில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது.

வைட்டமின் சி: முதுமை தோற்றம் வருவதைத் தடுக்கும் சக்தி வைட்டமின் சிக்கு உள்ளது. சரும வெடிப்பு போன்ற பிரச்னைகளை இயற்கையான முறையில் இது சரி செய்கிறது. எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கொய்யாப்பழம், நெல்லிக்காய், மாங்காய், முட்டைக்கோஸ் ஆகியவற்றில் இந்த வைட்டமின் நிறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
குழந்தையின்மை என்பது நோயல்ல; அதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
The role of vitamins in skin health!

வைட்டமின் டி: சரும செல்களுக்கு வைட்டமின் டி புத்துணர்வு அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது. மீன், இறைச்சி போன்றவற்றில் அதிகம் உள்ள இந்த வைட்டமினை சூரிய வெளிச்சத்தில் இருந்தும் பெறலாம்.

வைட்டமின் ஈ: சருமம் ஈரப்பதம் இழப்பதை தடுப்பதில் வைட்டமின் ஈக்கு பெரும் பங்கு உள்ளது. மேலும் இது சருமத்தை மென்மையாக்குவதோடு, கோடையில் சருமம் நிறம் மாறுவதையும் தடுக்கிறது. பாதாம் பருப்பு, பட்டாணி, பூசணி, எண்ணெய்கள் ஆகியவற்றின் மூலம் இந்த வைட்டமின் சத்து நமக்கு பெருமளவு கிடைக்கிறது.

இவ்வாறு வைட்டமின்களும் அதன் பலன்களும் நம் சருமத்துக்கும் உடலுக்கும் தேவையான சத்துக்களை தந்து நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com