ஹேர் டையில் நல்ல ஹேர் டை என்று எதுவுமே இல்லை!

There is no such thing as a good hair dye
There is no such thing as a good hair dye

ற்காலத்தில் 30 வயதிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்குவதால் அநேகம் பேர் கெமிக்கல் கலந்த ஹேர் டையை உபயோகிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அதன் பின்விளைவுகள் பற்றித் தெரிவதில்லை. அதில் பிபிடி (para phenylenediamine) எனப்படும் மோசமான கெமிக்கல் கலந்திருக்கிறது.

காலில் அணியும் ஷூக்கள் பளபளவெனத் தெரிய வேண்டும் என்பதற்காக கறுப்புப் பாலிஷ் வைத்து ஷூவை பாலிஷ் செய்வோம். அதே போலத்தான் இந்த பிபிடி கலந்த ஹேர் டைகளும். நம் தலையில் போட்ட உடனேயே தலைமுடி கறுப்பாகிறது. அதனாலேயே நிறைய பேர் அதை மீண்டும் மீண்டும் உபயோகிக்கின்றனர். ஹேர் டையில் மட்டுமல்ல, தற்காலிகமாகக் குத்திக்கொள்ளும் டேட்டூக்கள், அடர்ந்த நிறம் கொண்ட மேக்கப் சாதனங்களிலும் பிபிடி கலந்திருக்கிறது.

PPD கலந்த ஹேர் டை உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நலக்குறைவுகள்: பிபிடி பெட்ரோலியத்திலிருந்து எடுக்கப்பட்டு, உடன் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலந்து ஹேர் டை தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து ஹேர் டையை உபயோகித்தால் எக்ஸிமா எனப்படும் தோல் அழற்சி, அரிப்பு, தோல் எரிச்சல், சிவத்தல், உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் வீக்கம், தீக்காயம் ஏற்பட்டது போல  முகம், நெற்றி, கன்னம் போன்ற பகுதிகள் கறுத்துப் போதல், கண்களில் எரிச்சல், ஆஸ்துமா, இருமல், மூச்சுத்திணறல், நுரையீரல் வீக்கம், தொண்டை அசௌகரியம், கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் போன்ற வியாதிகளை வரவழைக்கும். மேலும், இது கருத்தரித்தல் குறைபாட்டையும்  ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
இந்த நேரம் நமக்குத் தேவை நோய் எதிர்ப்பாற்றல்!
There is no such thing as a good hair dye

முடி நரைத்துப்போனால் அதற்கு இயற்கையான மருதாணி, அவுரிப் பொடி உபயோகிக்கலாம். மற்றபடி கெமிக்கல் ஹேர் டை எப்பொழுதும் உபயோகிக்காதீர்கள். பாம்பில் கூட நல்ல பாம்பு என்று உண்டு. ஆனால், ஹேர் டையில் நல்ல ஹேர் டை என்று எதுவுமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com