குளிர்காலத்துக்கு ஏற்ற ஏழு உணவுகள்: தினமும் இதை சாப்பிட்டாலே போதும்!

குளிர்காலத்துக்கு ஏற்ற ஏழு உணவுகள்: தினமும் இதை சாப்பிட்டாலே போதும்!

குளிர்காலம் வந்துவிட்டாலே, சளி, காய்ச்சல் என எங்கு பார்த்தாலும் நோயாளிகள் கூடாரமாகவே இருக்கும். அதுவும் கொரோனா வந்த பிறகு சொல்லவே வேண்டாம், ஒரு நபர் தும்மினாலே அச்சத்தில் சுற்றி இருப்போர் உறைகிறார்கள். இந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே காரணம்.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் குளிரால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முடியும். பொதுவாகவே, குளிர்காலங்களில் சுடு தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனென்றால், மழை அதிகமாக வருவதால் சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். அதனால் சுடு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லதாகும். மேலும், குளிர்காலங்களில் ஜலதோஷம் பிடிப்பதால் நாக்கில் உணர்ச்சி இருக்காது. இதனால் என்ன சாப்பிட்டாலும் டேஸ்டும் தெரியாது, பிடிக்கவும் செய்யாது.

இனி, குளிர்காலத்திற்கு ஏற்ற சில ஆரோக்கிய உணவுப் பட்டியலைப் பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு பழம் முதல் கிவி பழம் வரை என சிட்ரஸ் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

பச்சை இலை கீரைகள்: கீரைகளில் அதிக வைட்டமின் சத்து இருப்பதால் அது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு வைட்டமின் இருப்பதால் தினமும் ஒரு கீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

உலர் பழங்கள்: உலர் பழங்களில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் அவை உங்களது உடல் வெப்ப அளவை சரியாக வைத்துக்கொள்ளும். இதனால் குளிர்காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சரியாகும். குறிப்பாக, இதில் ஒமேகா 3 இருப்பதால் குளிர்காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்னை, முடி உதிர்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர், சிறுமியருக்கு ஏற்படும் முன்பாத வெடிப்பின் காரணமும், தீர்வும்!
குளிர்காலத்துக்கு ஏற்ற ஏழு உணவுகள்: தினமும் இதை சாப்பிட்டாலே போதும்!

வேர் காய்கறிகள்: வேரில் இருந்து முளைக்கக்கூடிய காய்கறிகளான கேரட், நூக்கல் போன்ற காய்கறிகளை உண்ண வேண்டும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்து இருப்பதால் இது குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.

சூப்: குளிர்காலத்திற்கு நமது உடல் சூடாக சாப்பிட வேண்டும் என்றுதான் கேட்கும். அதற்கு ஏற்றவாறு தினமும் ஒரு காய்கறி சூப் குடிப்பது மிகவும் நல்லது.

முட்டை: முட்டையை குளிர்காலங்களில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தை சீராக வைக்கும்.

இஞ்சி: இஞ்சி பல்வேறு உடற்பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகும் ஒரு அருமருந்தாகும். இதனால் குளிர்காலங்களில் இஞ்சி டீ, இஞ்சி மிட்டாய் சாப்பிடுவதால் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com