முட்டி வலி இருப்பவர்கள் இதுபோன்ற காலணிகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்!

Knee Pain Relief Shoes
Knee Pain Relief Shoes
Published on

முட்டி வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எனினும், சில சமயங்களில் காலணிகள் அணிவதுகூட முட்டி வலிக்குக் காரணமாக இருக்கலாம். சரியான காலணியைத் தேர்வு செய்து அணியாதது கூட முட்டி வலியை அதிகப்படுத்தி Knee Arthritis, Knee ligament strain, Muscle strain போன்ற பிரச்னைகள் வரக்கூடும். இந்தப் பதிவில் எந்த மாதிரியான காலணிகளை அணிந்தால், முட்டி வலி வருவதைக் குறைக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. ஆண்களோ அல்லது பெண்களோ காலணிகளைத் தேர்வு செய்யும்போது அதன் பின் பெல்ட் இருப்பது போன்ற மாடலை தேர்வு செய்வது சிறந்ததாகும். ஏனெனில், மற்ற காலணிகளை அணியும்பொழுதும் உங்கள் காலால் அதை அழுத்திப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும். உங்களுடைய Muscle work கால்களில் அதிகமாக இருக்கும். அந்தத் தாக்கம் முட்டியில் தெரியும். எனவே, எப்போதுமே காலணி வாங்கும் பொழுது பின்னாடி பெல்ட் வைத்ததுப் போல வாங்குவது சிறந்தது.

2. முழுமையாக Flat slippers பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். சின்ன ஹீல்ஸ், மொத்தமான காலணி இதுபோன்று பயன்படுத்தக்கூடாது. இதனால் முட்டி வலி அதிகரிக்கக்கூடும்.

3. நடக்கும்பொழுது உங்களுடைய குதிக்கால் காலணியில் இருந்து வெளியிலே வரக்கூடாது. அது காலணிக்குள்ளேயே இருக்க வேண்டும். எனவே, காலணிகளை தேர்வு செய்யும் பொழுது உங்கள் கால்களை விட ஒரு சைஸ் அதிகமாக எடுப்பது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
Chia seeds Vs Sabja seeds: உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?
Knee Pain Relief Shoes

4. காலணிகள் Cushion ஆக இருக்கக் கூடாது. சில காலணிகள் மிகவும் Cushion ஆக இருக்கும், சில காலணிகள் மிகவும் உயரமாக இருக்கும். அதை போட்டுக்கொண்டு நடக்கும்பொழுது காலணிகள் பிறழக்கூடும். இதுபோன்ற காலணிகளை அணியும் போது கால்கள் மற்றும் முட்டி இரண்டிற்குமே வேலை அதிகமாகும்.

எனவே, காலணிகளை தேர்வு செய்யும்பொழுது Flat and soft ஆக தேர்வு  செய்ய வேண்டும். இந்த 4 டிப்ஸை சரியாகப் பின்பற்றினாலே முட்டி வலி வராமல் தடுக்க முடியும், முட்டி வலி இருந்தாலும் அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com