தைராய்டு பிரச்னையா? அப்ப கண்டிப்பா இந்த 4 பழங்களை சாப்பிடுங்கள்!

Thyroid problem? eat these 4 fruits
Thyroid problem? eat these 4 fruitshttps://www.facebook.com
Published on

தைராய்டு என்பது கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் தைராய்டு பிரச்னையை அதிகரிக்கின்றன. தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும்.

தைராய்டு பிரச்னைகளுக்கும் உணவு முறைக்கும் இடையே உள்ள தொடர்பு உள்ளது. தைராய்டு சுரப்பியை நிர்வகிப்பதில் மருந்துகளுடன் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் சமச்சீர் உணவு பயனுள்ளதாக இருக்கும். தைராய்டு பிரச்னையில் அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவு அவசியம். சரியான மருந்துகளுடன் நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, தைராய்டு பிரச்னைகளால் ஏற்படும் அறிகுறிகள் குறைகின்றன. தைராய்டு பிரச்னையில் சில பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

1. ஆப்பிள்: தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ஆப்பிள் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் எடையையும் குறைக்க உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதோடு, தைராய்டு சுரப்பியும் சரியாக வேலை செய்யும். ஆப்பிளை உட்கொள்வது உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறுவதன் காரணமாக தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.

2. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதால் செல்கள் மேலும் சேதமடையாமல் பாதுகாக்கும். ஃப்ரீ ரேடிக்கல்கள் தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை ஏற்படுத்தும். இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரையை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
க்ரான்பெரி டீயிலிருக்கும் ஆரோக்கியம் அறிவோமா?
Thyroid problem? eat these 4 fruits

3. பெர்ரி: பெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை சீர் செய்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பெர்ரிகளில் அதிக அளவிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். தைராய்டு பிரச்னை உள்ள நோயாளிகள் இரத்த சர்க்கரை மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் பிளம்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

4. அன்னாசி: அன்னாசிப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளன. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உள்ளதால் தைராய்டு பிரச்னைகளினால் ஏற்படும் சோர்வை நீக்குகிறது. இது மலச்சிக்கல் பிரச்னையை போக்கவும் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com