இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு பிரச்னையாக இருக்கலாம்: எச்சரிக்கை!

Thyroid problem may be present if these symptoms are present: Warning!
Thyroid problem may be present if these symptoms are present: Warning!

தைராய்டு பிரச்னை இருக்கிறதா? இல்லையா? என்பதை நோய் முற்றிய பிறகுதான் நாம் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இந்தப் பிரச்னையின் அறிகுறிகள் நீண்ட நாட்களுக்கு முன்பே உடலில் தென்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தைராய்டு பிரச்னை தற்போது பெண்களிடையே மிகவும் அதிகரித்து வருகின்றது. உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.

நமது உடலின் முக்கியமான ஹார்மோன்களின் உற்பத்திக்கு இதுவே காரணம். தைராய்டு சுரப்பி நமது கழுத்துக்கு முன்னால் பட்டாம்பூச்சி வடிவில்  உள்ளது. இது ட்ரையோடோதைரோனைன் (T3) மற்றும் தைராக்ஸின் (T4), எடை இழப்பு, வளர்சிதை மாற்றம், ஆற்றல் போன்ற முக்கிய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. ஹார்மோன் அளவுகள் திடீரென மாறும்போது, ​​பலவிதமான அறிகுறிகள் நமது உடலில் தோன்றக்கூடும். ஹைப்பர் தைராய்டிசம் (அதிகப்படியான தைராய்டு) அல்லது ஹைப்போ தைராய்டிசம் (செயலற்ற தைராய்டு) என இதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

தைராய்டு அளவு நம்முடைய உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவு தைராய்டு ஹார்மோன்கள் உடலின் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிகளவு தைராய்டு ஹார்மோன்கள் உடலின் எடையை குறைக்கும். இந்த அறிகுறி பெண்களிடையே பொதுவாகக் காணப்படுகிறது என்கின்றனர். இதனை எப்படி சீரான நிலையில் வைப்பது? அதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து காண்போம்.

தைராய்டு அறிகுறிகள்: தீவிர சோர்வு, முடி உதிர்தல், மாதவிடாய் தாமதமாவது, வியர்த்தல் மற்றும் பசி போன்றவை தைராய்டு பிரச்னைக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். உலகெங்கிலும் உள்ள எட்டு பெண்களில் ஒருவருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தைராய்டு கோளாறின் பொதுவான ஆரம்ப அறிகுறி உங்கள் கழுத்தைச் சுற்றியுள்ள சருமம் கருமை ஆவது. தைராய்டு சுரப்பி, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். T3 மற்றும் T4 அளவுகளில் ஏற்படும் இடையூறுகள் வறண்ட சருமம், உச்சந்தலையில் அரிப்பு, எண்ணெய் சருமம் அல்லது நகங்களில் உடையக்கூடிய தன்மையை ஏற்படுத்தும்.

சோர்வு மற்றும் பலவீனம்: சோர்வாக இருப்பது தைராய்டின் முக்கிய அறிகுறியாகும். சோர்வு ஒரு அடிப்படை தைராய்டு பிரச்னையின் விளைவாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்ற செயல்பாட்டை கணிசமாக பாதிக்கும். இதனால், தைராய்டுடன் தொடர்புடைய சோர்வு மற்றும் பலவீனம் இதயத் துடிப்பு, தசை பலவீனம் மற்றும் நடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
தடுப்பூசி மருந்துகள் யாருக்கெல்லாம் கட்டாயம்?
Thyroid problem may be present if these symptoms are present: Warning!

தூங்குவதில் சிரமம்: தைராய்டு செயலிழப்பு தூக்கத்தை மோசமாக பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். நல்ல தூக்கத்தை பெறுவதே கடினமாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளும் தென்படலாம் என்பதால் இவற்றை உணர்ந்தால் நீங்கள் சோதனை செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியம்: தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவலை, பதற்றம், நடுக்கம், எரிச்சல், தீவிர மனநிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகளில் நினைவாற்றல் இழப்பு போன்றவை கூட ஏற்படுகிறது.

மாதவிடாய் மாற்றங்கள்: தைராய்டு பாதித்த பெண்களில் மாதவிடாய் மாற்றங்கள்தான் மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் இடையூறுகளே இந்த மாற்றத்திற்குக் காரணமாகிறது. எனவே, 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com