கோடைகாலத்தில் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்! 

Tips to Reduce Side Fat in Summer
Tips to Reduce Side Fat in Summer

கோடைகாலம் வந்துவிட்டாலே நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க அதிக முயற்சி செய்கிறோம். ஏனெனில் கோடை வெயிலில் கொழுப்பு விரைவாக கரைந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. உடலில் மற்ற பகுதிகளில் உள்ள கொழுப்பை விட Love Handles எனப்படும் இடுப்பின் ஓரத்தில் படிந்திருக்கும் பக்கக் கொழுப்பை குறைப்பது மிகவும் கடினம். இந்த பதிவில் கோடைகாலத்தில் சைடு கொழுப்பை குறைப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்களைப் பார்க்கலாம் வாங்க. 

  1. கார்டியோ பயிற்சி: கலோரிகளை எரித்து ஒட்டுமொத்த உடல் கொழுப்பைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை. ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடனம் ஆடுதல் போன்ற செயல்பாடுகளால், பக்க கொழுப்பு உட்பட தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் குறைகின்றன. 

  2. ஸ்ட்ரென்த் ட்ரெய்னிங்: பக்க கொழுப்பை குறைப்பதற்கு நீங்கள் முறையாக தசைகளை குறிவைக்கும் ஸ்ட்ரென்த் ட்ரைனிங் பயிற்சிகளை செய்தாலே போதும். ரஷ்யன் ட்விஸ்ட், க்ரஞ்சஸ் போன்ற வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கான உடற்பயிற்சிகளை அதிகம் செய்யுங்கள். 

  3. ஆரோக்கியமான உணவு: நீங்கள் வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையாது. 80 சதவீதம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மூலமாகவே கொழுப்பு குறையும். எனவே ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். பழங்கள் காய்கறிகள் புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். 

  4. நீரேற்றம்: நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். அதுவும் கோடை காலங்களில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பராமரித்து எடை இழப்புக்கு நீரேற்றம் பெரிதளவில் உதவும். 

  5. உணவுக் கட்டுப்பாடு: அதிகமாக உணவு சாப்பிடுவதை தவிர்ப்பதற்கு, பகுதிக் கட்டுப்பாட்டை பின்பற்றவும். மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக அதே உணவை ஆறு வேலையாக பிரித்து சாப்பிடுங்கள். சிறு தட்டுகள் மற்றும் கிண்ணங்களை பயன்படுத்துங்கள். முடிந்தவரை அதிக கலோரி மிக்க உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

  6. போதுமான தூக்கம்: ஒவ்வொரு நாளும் குறைந்தது 7-9 மணி நேரம் நன்றாக தூங்குங்கள். போதுமான தூக்கம் உங்கள் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் பசி கட்டுப்படுத்தப்பட்டு உடல் எடை குறைவது எளிதாகிறது. நீங்கள் சரியாக தூங்காதபோது அது பசியைத் தூண்டி, உடல் எடை குறைப்பு முயற்சியைத் தடுக்கலாம். எனவே தினசரி சரியாகத் தூங்குங்கள்.

  7. மன அழுத்தம்: உங்கள் மன அழுத்தத்தை நிர்வகியுங்கள். ஏனெனில் மன அழுத்தம் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் போன்றவற்றை செய்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். 

இதையும் படியுங்கள்:
உடற்பயிற்சி பிரியர்களுக்கு ஏற்ற 3 மலிவான விளையாட்டு உபகரணங்கள்!
Tips to Reduce Side Fat in Summer

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு, நீங்கள் முறையான உணவு முறை பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்தாலே போதுமானது. வெறும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் டார்கெட் செய்து குறைக்க முடியாது. உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பு அளவு குறைந்தால் மட்டுமே, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதை தெரிந்துகொண்டு, சரியானபடி முயற்சித்தால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com