கண்கள் குளிர்ச்சியாக இருக்க இதைச் செய்யுங்கள்!

கண்கள் குளிர்ச்சியாக இருக்க இதைச் செய்யுங்கள்!
Published on

குளிர்ந்த நீரைக் கொண்டு கண்களைக் கழுவுவது கண்களின் எரிச்சலைக் குறைக்க உதவும். ஐஸ் கட்டித் துண்டுகளை சுத்தமான பருத்தி துணிக்குள் வைத்து அதை கண்கள் மேல் வைத்துக் கொண்டால் குளிர்ச்சியாக இருக்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை குளிர்ந்த நீரில் நனைத்து பின் அதை கண் இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். சுத்தமான பருத்தி துணியை எடுத்து அதனை ரோஸ் வாட்டரில் (பன்னீர்) நனைத்து கண்களில் ஒத்திக்கொள்ளலாம். இதுவும் கண் எரிச்சலைக் குறைக்க உதவும். தேவைப்பட்டால் ஒருசில துளிகள் ரோஸ் வாட்டரை கண்களில் விடலாம்.

நாம் அழும்போது வெளிவரும் கண்ணீரால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுகிறது. உங்களுக்கு அழுகை வரவில்லை என்றால் வெங்காயத்தை உரித்தால் கண் எரிச்சல் ஏற்பட்டு அழுகை வரும். நீங்கள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பான சன் கிளாஸ் அணிந்து செல்லுங்கள். சன் கிளாஸ் பயன்படுத்துவது சூரிய கதிர்வீச்சிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்கும்; கண்களும் குளிர்ச்சியாக இருக்கும்; கண் எரிச்சல் இருக்காது.

உருளைக் கிழங்கை வட்டமாக நறுக்கி அதை உங்கள் கண்களின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொண்டால் கண் வீக்கம், கண் எரிச்சல் குறையும். ஆனால், இதைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்ய வேண்டும். கொத்தமல்லி தழைகளை குளிர்ந்த நீரில் நனைத்து விட்டு அதை நன்றாக அரைத்து கண்களில் பூசிக் கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். கண் எரிச்சல் காணாமல் போய்விடும்.

கண் இமைகளைச் சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலைச் சாற்றை பூசிவந்தால் சரியாகிவிடும். தேயிலைத் தூளை கொதிக்கவைத்து வெள்ளைத் துணியில் கட்டி கண்களின் மேல் வைத்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் குளிர்ச்சி பெறும். திரிபலாதி சூரணத்தை சாப்பிட்டு வந்தாலும் கண் பார்வை நன்றாக இருக்கும். இந்த சூரணத்தை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு கோப்பை நீரில் இரவே கலந்து வைத்துவிட்டு காலையில் அந்த நீரைக் கொண்டு கண்களை கழுவினால் கண்கள் பளபளப்பாக இருக்கும்.

பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து அதை கண்களைச் சுற்றி பத்துப் போடுவது போல் போட்டால் கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் மறைந்துவிடும். சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வாரம் ஒருமுறை கண்களில் விட்டுவந்தால் கண்கள் பிரகாசமாக இருக்கும். தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவிக் கொண்டால் கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com