உடல் ஆரோக்கியத்திற்கு என்றுமே தக்காளிதான் பெஸ்ட்!

உடல் ஆரோக்கியத்திற்கு என்றுமே தக்காளிதான் பெஸ்ட்!
travenian
Published on

க்காளியில் அப்படி என்ன ஸ்பெஷல்? உங்களுடைய தினசரி உணவில் எதற்காக தக்காளியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

இந்த அழகிய சிவப்பு நிற விஷயத்தை நாம் சமைக்கும் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்துகிறோம். தக்காளிக்கு மாற்றுப் பொருளே கிடையாது. தக்காளி புளிப்பு சுவையை ஈடு செய்வதற்கு புளி, எலுமிச்சை, வினிகர் என எதை பயன்படுத்தினாலும் அது தக்காளிக்கு நிகராகாது. தனித்துவமான சுவை மட்டும் ஆரோக்கிய நன்மைகள் இருந்த இந்த தக்காளியை உங்களிடையே தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தொடங்கி சரும பிரச்னைகளைத் தடுப்பது வரை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல உடல் நலப் பிரச்னைகளை தடுக்கின்றன.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: தக்காளியின் உடலுக்கு அத்தியாவசியமான பல வைட்டமின்களும் தாதுக்களும் காணப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு தக்காளி சாப்பிடுவது உடலில் வைட்டமின் சி தேவை பூர்த்தி செய்கிறது. தக்காளியில் காணப்படும் லைகோபின் புற்று நோய்களைத் தடுக்கின்றன. பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த தக்காளி நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இது உடலில் ரத்தம் குறைவதையும் தடுக்கிறது.

செரிமானத்திற்கு நல்லது: நாச்சத்துக்கள் நிறைந்த தக்காளி உங்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவும் தக்காளியை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை தடுக்கலாம். இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றுவதன் மூலம் வயிறு சார்ந்த பிரச்னைகளை தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: தக்காளியை தொடர்ந்து உணவில் சேர்த்து வர, கொலஸ்ட்ரலின் அளவை குறைக்கலாம். உடலில் கொலஸ்ட்ரலின் அளவுகள் அதிகரிக்கும்போது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது. தக்காளியில் காணப்படும் வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதயம் தொடர்பான நோய்களை தடுக்கின்றன.

கொழுப்பை எரிக்க உதவுகிறது: தக்காளி சாப்பிடுவது உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை மேம்படுத்துகிறது. மேலும், உடல் எடையை குறைக்க தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் தக்காளியில் நிறைந்துள்ளன. தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளும்பொழுது தேவையற்ற பசி உணர்வையும் கட்டுப்படுத்தலாம்.

கண் பார்வைக்கு நல்லது: கண் பார்வைக்கு மிகவும் அத்தியாவசியமான வைட்டமின் ஏ சத்துக்கள் தக்காளியில் நிறைந்துள்ளன. உங்களுடைய கண் பார்வையை மேம்படுத்தவும் கண் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கவும் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com