உப்பு தேநீரும், உடல் நலமும்… புதுசா இருக்கே?

Health Benefits of Adding Salt to Tea.
Health Benefits of Adding Salt to Tea.
Published on

தேநீர் நீண்ட காலமாக அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு கொண்டாடப்படுகிறது. அதன் சுவை மற்றும் நன்மைகளை மேம்படுத்த பல பொருட்கள் அதில் கலக்கப்படுகின்றன. இஞ்சி டீ, லெமன் டீ, ஹனி டீ போன்று தேநீரில் உப்பு கலந்து குடித்தாலும் நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இத்தகைய அற்புத பானத்தில் உப்பை சேர்ப்பது எதிர்மறையான ஒன்றாகத் தோன்றினாலும், இதன் மூலமாக உண்மையிலேயே பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அத்தகைய நன்மைகள் என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

  1. எலக்ட்ரோலைட் சமநிலை: உப்பில் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை உடலில் சரியான திரவ சமநிலை மற்றும் நீரேற்றத்தைப் பராமரிக்க அவசியம். நீங்கள் வழக்கமாக குடிக்கும் தேநீரில் சிறிதளவு உப்பை சேர்ப்பதன் மூலம், எலக்ட்ரோலைட்டுகளை அதிகரித்து உடலின் நீரேற்றத்தை அதிகரிக்கலாம். இது வெப்பமான காலங்களில் அதிக நீரிழப்பைத் தடுத்து உடலுக்கு நன்மை பயக்கும். 

  2. செரிமான ஆரோக்கியம்: செரிமான ஆரோக்கியத்தில் உப்பு பெரிதளவில் உதவுகிறது. இது தேநீரில் சேர்க்கப்படும்போது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கும். நீங்கள் என்றாவது அதிகமாக உணவு உட்கொள்கிறீர்கள் என்றால் அப்போது செரிமானப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தேநீரில் உப்பு கலந்து குடியுங்கள். 

  3. Mineral Boost: எலக்ட்ரோலைட்டுகளுக்கு அடுத்தபடியாக உப்பில் உடல் செயல்பாட்டுக்குத் தேவையான தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்களில் மக்னீசியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை அடங்கும். தேநீரில் உப்பை சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான தாதுக்கள் சிறிதளவு கிடைக்கிறது. இது காலப்போக்கில் அத்தியாவசிய தாதுக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பங்களிக்கும். 

  4. மன அழுத்தம் குறையும்: தேநீர் பருகுவதால் மன அழுத்தம் குறையும் என்றாலும், அதில் கொஞ்சம் உப்பு சேர்ப்பது மூலமாக அதிக நன்மைகளைப் பெறலாம். உப்பில் உள்ள சோடியம் அட்ரீனல் சுரப்பி செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. 

  5. ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படும்: தேனீரில் உள்ள கேட்டசின்கள், ப்ளேவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற சில கலவைகள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை சில சமயங்களில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கலாம். ஆனால் தேநீரில் உப்பு கலந்து பருக்கினால், உடலுக்குத் தேவையான முக்கிய சேர்மங்கள் உறிஞ்சுவது மேம்பட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும். 

இதையும் படியுங்கள்:
boAT ஹெட்போன்ஸ் பயன்படுத்துபவர்கள் ஜாக்கிரதை… சைபர் தாக்குதல்! நடந்தது என்ன? 
Health Benefits of Adding Salt to Tea.

தேநீரில் உப்பு கலந்து குடிக்கும்போது மேலே குறிப்பிட்ட எல்லா ஆரோக்கிய நன்மைகளும் உங்களுக்கு கிடைத்தாலும், உப்பை மிதமாகவே கலக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கொஞ்சமாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் போதும். அதிகப்படியான உப்பு சேர்த்தால் அது வேறு பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே கவனத்துடன் இருக்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com