பாலை இந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தலாமா?

Uses of Milk.
Uses of Milk.
Published on

பால் என்றாலே நம் நினைவுக்கு வருவது குழந்தைகள் வளர்ச்சிக்கான முக்கிய உணவு அல்லது காலை உணவுடன் சேர்த்து குடிக்கும் டீ, காபி என்பதுதான். ஆனால், பால் என்பது வெறும் உணவுக்கான பொருள் மட்டுமல்ல. பண்டைய காலங்களில் இருந்தே பால் பல்வேறு வகையான வெளிப்புற பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சருமம், கூந்தல் மற்றும் வீட்டு பொருட்கள் உற்பத்தி என பல துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பதிவில் பாலின் வெளிப்புற பயன்பாடுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

சருமப் பராமரிப்பில் பாலின் பயன்பாடு: 

பால் நம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு இயற்கையான பொருள். இது சருமத்தை மென்மையாக்கி ஈரப்பதத்தை தக்க தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவும். 

பாலை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்து, முகத்தில் உள்ள அழுக்கையும் எண்ணெய் பசையையும் போக்க முடியும். இது முகத்தை புத்துணர்ச்சியாக மாற்றும். 

பால் சரும நிறத்தை சீரமைத்து வெண்மையாக்கும் தன்மை கொண்டது. இது சூரிய ஒளியால் ஏற்படும் கருமையைக் குறைக்கும். தோல் அலர்ஜி மற்றும் எரிச்சல் உள்ளவர்களுக்கு பால் நல்ல நிவாரணம் கொடுக்கும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதால், சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளும். 

கூந்தல் பராமரிப்பில் பாலின் பயன்பாடு: பால் சருமத்திற்கு நன்மை சேர்ப்பது போலவே கூந்தலுக்கும் பல நன்மைகளை அளிக்கும் ஒரு இயற்கையான பொருள். இது கூந்தலை மென்மையாக்கி, பளபளப்பாக மாற்றும். பால், கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படும். இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதால், இதைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்து தலையில் தடவுவது நல்லது. வாரம் ஒரு முறையாவது பால் பயன்படுத்தி மாஸ்க் தயாரித்து தலையில் தேய்த்தால், தலைமுடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைப் போக்கும் பூண்டு பால்!
Uses of Milk.

இது தவிர வீட்டுப் பொருட்கள் தயாரிப்பிலும் பாலின் பயன்பாடு அதிகம் உள்ளது. பாலை பயன்படுத்தி சோப்பு, பெயிண்ட், பசை போன்றவை தயாரிக்கப்படுகின்றன. 

பால் என்பது வெறும் உணவு மட்டுமல்ல, பல்துறை திறன் கொண்ட ஒரு அற்புதப் பொருள். இது சருமம், கூந்தல் மற்றும் வீட்டு பொருட்கள் உற்பத்தி என பல துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பால் இயற்கையான, பாதுகாப்பான மற்றும் மலிவான பொருள் என்பதால் இதனை நாம் நம் தினசரி வாழ்வில் பல வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், சிலருக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com