வாழ்வாங்கு வாழ வைக்கும் வாழைத்தண்டு சாறு!

Banana Stem juice
Banana Stem juice
Published on

வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துவர செரிமானம் சீராக இருக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னையும் நீங்கும். சிறுநீரகக் கற்களை இயற்கையான முறையில் அகற்றவும் இது உதவுகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுகள் நீக்கவும் வாழைத்தண்டு சாப்பிடலாம். வாழைத்தண்டு வைட்டமின் B6 நிறைந்தது. மேலும், இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் இது நன்மை பயக்கும். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி வாழைத்தண்டு சாப்பிடுங்கள்.

வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து வடிகட்டி அதனுடன் 50 கிராம் பார்லி பொடியை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அரை லிட்டர் நீரை கொதிக்க வைத்து அதில் வாழைத்தண்டு, பார்லி கலவையை கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தால் வாழைத்தண்டு சூப் தயார். இந்த சூப்பை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். அதோடு, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களும் கரையும்.

அசிடிட்டி மற்றும் கேஸ் பிரச்னையில் இருந்து விடுபடவும் அமிலத்தன்மை பிரச்னையால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டை வாரம் இரண்டு முறையாவது உட்கொள்ள வேண்டும். இது உடலில் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சமநிலையை பராமரிக்கிறது. நெஞ்செரிச்சல், அசௌகரியம் மற்றும் வயிற்றுவலி ஆகியவற்றை குணப்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழைத்தண்டு பித்தப்பையை சுத்தமாக வைத்து சிறுநீரகக் கற்கள் சேராமல் தடுக்கிறது. வாழைத்தண்டு சாறுடன் ஏலக்காய் பொடி, மோர் சேர்த்து கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை சுத்தமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிட ஏற்ற பானம் இதுவாகும்.

உடலில் இருந்து நச்சுகளை அகற்ற வாழைத்தண்டு உதவுகிறது. சிறுநீரக கற்களை இயற்கையான முறையில் அகற்றவும் இது பயனுள்ளதாக இருக்கும். வாழைத்தண்டை வெட்டிய பின்னர் அடிப்பகுதியில் வரும் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் சிறுநீரக கற்கள் வெளியே வந்துவிடும்.

வாழைத்தண்டு சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் அதிலுள்ள உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் சிறுநீர் கழித்தலை அதிகரித்து சிறுநீரகக் கற்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தள்ளி விடும்.

இதையும் படியுங்கள்:
கோரைப் பற்கள் கொண்ட நீர் மான்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?
Banana Stem juice

வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. எனவே இரும்பு சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். வாழைத்தண்டு இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. வழைத்தண்டு இன்சுலின் என்சைம்களை ஊக்குவிக்கிறது.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும். சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

மிக்சியில் நறுக்கிய வாழைத்தண்டு, பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால் சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com