சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் காய்கறிகள்!
சிறுநீரகக்கல் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், இந்தப் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற சில காய்கறி உணவுகள் பெரிதும் பயன்படுகின்றன. இந்தக் காய்கறிகள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன. இதுபோன்ற உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக் கற்கள் பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்.
கேரட், பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை சிறுநீரகக் கற்களை படிய விடாமல் தடுத்து அவற்றைக் கரைக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, சிட்ரேட் ஆகிய சத்துக்கள் சிறுநீரகக் கற்களின் ஆக்ஸலேட் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து அதை சிதைத்து, சிறுநீரகத்தில் கற்கள் படிய விடாமல் தடுக்கின்றன.
அன்னாசிப் பழத்தில் சிறுநீரகக் கற்களின் பைப்ரினை சிதைக்கும் நொதிகள் உள்ளன. எனவே, அன்னாசி பழம் உண்பது எளிதில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கஉதவுகிறது.
கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவை சிறுநீரகக் கற்களை சேர விடாமல் தடுக்கின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் தினமும் இளநீர், மோர், வெள்ளரி, நுங்கு போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். அதோடு சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டு சாறு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகக்கல் வராமல் இருக்க பாஸ்பேட் மிகுந்த காபி, டீ, சோடா, செயற்கை குளிர்பானங்கள் சாக்லேட் போன்றவற்றால் தவிர்க்கலாம்.
சிறுநீரகக்கல் பிரச்னை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தக்காளி, வெண்டைக்காயை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து தானிய உணவுகளையும் சாப்பிடலாம்.
பூசணி, வெள்ளரி, சுரைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், சூப் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். ஸ்பினாச் என்னும் பசலைக்கீரையை தவிர அனைத்து கீரை மற்றும் காய்களை அளவாக சாப்பிடலாம். டாக்டர் பரிந்துரைப்படி நீர் அருந்துவது அவசியம். நல்ல உணவுப் பழக்கத்தின் மூலம் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கலாம்.