100 ஆண்டுகள் வாழ வேண்டுமா? இந்த ஒரு பாத்திரத்தில் மட்டும் சமைத்து உண்ணுங்கள்!

Cooking utensil for healthy life
best Cooking utensil
Published on

பொதுவாக, வீடுகளில் சமைப்பதற்கு இரும்பு, வெங்கலம், ஈயம், அலுமினியம்,  ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்கள், மண்பாண்டம் என பல வகை பாத்திரங்கள்(Cooking utensil) பயன்பாட்டில் உள்ளன. எந்த பாத்திரத்தில் சமைத்தால் என்ன சத்தும் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இரும்பு: இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் ஒரே இடத்தில் சூடு பிடிக்காமல் எல்லா இடங்களிலும் சமமாக சூடு பரவும். மேலும் அதிக நேரம் சாப்பாடு சூடாக இருக்கும். இரும்பு சத்து சமைக்கும் சாப்பாட்டில் சேரும். அதை நாம் உட்கொள்வதால், நம் உடலில் இரும்பு சத்து சேர்ந்து, ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும். குறிப்பாக, இரும்பு பாத்திரத்தில் வாழைக்காய் மற்றும் துவர்ப்பு காய்கறிகளை சமைக்கவே கூடாது. அதிலும் துரு பிடித்த இரும்பு பாத்திரத்தில் சமைப்பது மிகவும் ஆபத்தானது.

வெங்கலம்: வெண்கல பாத்திரத்தில் சமைக்கும் சாப்பாட்டிற்கு தனி சுவை உள்ளது. வெங்கல பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் சோர்வு நீக்கி, புத்துணர்ச்சி உண்டாகும். ஆனால், வெண்கல பாத்திரங்கள் பச்சை நிறமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சை நிறம் படிந்த வெங்கல பாத்திரத்தில் சமைத்தால் சாப்பாடு விஷமாகும். அதனை தவிர்க்க, வெங்கல பாத்திரத்தில் சமைத்த பிறகு அதனை நன்கு கழுவி வெயிலில் காய வைத்து அதன் பிறகே மீண்டும் உபயோகிக்க வேண்டும்.

ஈயம்: ஈய பாத்திரத்தில் ரசம் வைத்து சாப்பிடுவது அலாதி சுவைதான். தற்போது உள்ள ஈய பாத்திரங்களை உண்மையான ஈயம் பூசியதா அல்லது கலப்படமா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

அலுமினியம்: அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதால் அதில் உள்ள அலுமினியம் சாப்பாட்டில் இறங்கி, நாம் உண்ணும் உணவு, நமது மூளையில் உள்ள செல்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். மேலும், சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, காசநோய் போன்ற பிரச்னைகளும் வரும். அலுமினியம் நம் உடலில் சேர்வதால், அலுமினியம் உடலில் படிந்து சரும நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும். ஆனால், அலுமினியத்தில் சமைத்த உடனேயே வேறொரு பாத்திரத்திற்கு அந்த உணவை மாற்றி விட்டால் இந்தக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் / எவர்சில்வர்: இந்தப் பாத்திரத்தில் சமைத்தால் மட்டுமே உடலுக்கு எந்தவிதமான கேடும் ஏற்படாது. இரும்பு, கார்பன், நிகில், குரோமியம் போன்ற உலோகங்கள் சேர்ந்து செய்யப்பட்டது எவர்சில்வர் பாத்திரங்கள். எவர்சில்வர் பாத்திரங்களை வாங்கும்பொழுது அது, ‘FOOD GRADE STAINLESS STEEL’ வினால் ஆனதா என்பதை மட்டும் சரிபார்த்து வாங்க வேண்டும்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள்: எண்ணெய் விடாமல் இந்தப் பாத்திரங்களில் உணவுகளைச் செய்யலாம், தோசை சுடலாம் என பலரும் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்குகிறார்கள். இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிக சூடாக்கி அதில் உணவு சமைத்து சாப்பிடும்போது அதில் உள்ள டெஃப்லான் (TEFLON) வயிறு சம்பந்தமான கோளாறுகள், தைராய்டு பிரச்னை, பிசிஓடி, ஞாபக மறதி, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். அதிகமாக சூடாக்கப்படாமல் நான்ஸ்டிக் தவாவில் சாப்பாடு தயாரிக்கலாம். மேலும் நான்ஸ்டிக்கில் கீறல்கள் விழாமல், கோட்டிங் போகாமல் இருக்கும் வரை, அதனைப் பயன்படுத்துவது சிறந்தது.

மண்பாண்டம்: எல்லாவற்றையும் விட சிறந்த உணவு தயாரிக்கும் பொருளாக மண் பாண்டம் கருதப்படுகிறது. மண்பாண்டத்தில் சமைப்பதால், மிகுந்த ருசியோடும், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிடும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்!
Cooking utensil for healthy life

அறிவியல் ரீதியாக மண் பானையில் சமைக்கும் உணவு மெதுவாக சமைக்கப்படுவதால், எந்த சத்தும் வீண் போகாமல் நம் உடலில் சேருகிறது. மண்பானையில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் நிறைந்துள்ளது. மண் பானையில் சமைத்து உண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.

-சௌமியா சுப்பிரமணியன்

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com