40 வயதுக்கு மேல் உடல் எடையைக் குறைக்க ஆசையா? கொழுப்பை வெண்ணை போல கரைக்கும் டிப்ஸ்! 

Fat loss tips.
Fat loss tips.
Published on

நமக்கு வயதாக வயதாக உடலின் வளர்சிதை மாற்றம் முற்றிலும் மாறுபடுகிறது. அதாவது சிறுவயதில் வளர்சிதை மாற்றம் வேகமாக இருப்பதால், நாம் அதிகமாக சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்போம். ஆனால் ஒரு 40 வயதுக்கு மேல் வளர்சிதை மாற்றம் குறைந்து விடுகிறது. இதனால் உடல் எடை கூட ஆரம்பிக்கும். அதேபோல உடல் எடை கூடுதலாக இருப்பவர்களும் அதை குறைப்பது கடினம். 

இந்த சமயத்தில் உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது கடினம் என்றாலும், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் போது உடல் எடையை வேகமாகக் குறைக்க முடியும். சரி வாருங்கள் 40 வயதிற்கு மேல் உடல் எடையை வேகமாகக் குறைக்கும் ரகசிய டிப்ஸ் என்னவென்று பார்க்கலாம்.

அதிகமாக தண்ணீர் குடியுங்கள்: தினசரி உடல் தேவைக்கு ஏற்ற தண்ணீரை குடித்து வந்தாலே ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் எடை மேலாண்மைக்கும் உதவும். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்தால் வளர்ச்சிதை மாற்றம் சீராக இருந்து, ஒரு முழுமை உணர்வை ஏற்படுத்தும். இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. நீங்கள் அதிக கலோரி உட்கொள்வதைத் தவிர்த்தாலே உடலில் இயற்கையாகவே கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். 

தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்: 

சரியான மற்றும் தரமான தூக்கம் எடை மேலாண்மையில் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் சரியாக தூங்காத போது அது நம் ஹார்மோன் சமநிலையை மோசமாக்கி, வளர்சிதை மாற்றத்தை முற்றிலுமாக மாற்றி விடுகிறது. இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அதிக பசிக்கு வழிவகுக்கும். எனவே இயற்கையாகவே கொழுப்பை எரிக்கும் முறையை துரிதப்படுத்த மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவ தினமும் குறைந்தது 8 முதல் 9 மணி நேரம் தூக்கம் தேவை.

இதையும் படியுங்கள்:
இந்த 15 பழக்கங்கள் உங்களுக்கே உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும்! 
Fat loss tips.

எடைப்பயிற்சி முக்கியம்: 

நமக்கு வயதாக வயதாக உடல் தசையின் நிறை குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாகவே வளர்சிதை மாற்றம் குறைகிறது. இந்த தசைக் குறைப்பை எதிர்த்துப் போராட ஒருவர் எடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஜிம்முக்கு சென்று ஒரு சராசரி எடையைத் தூக்கி பயிற்சி செய்வது மூலமாக உங்களின் மெலிந்த தசையை பராமரிக்க உதவும். 

உணவில் கவனம் தேவை: 

தினசரி நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். உணவில் கட்டுப்பாடு மிக அவசியம். சிலரால், தான் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே உடல் எடையை குறைப்பது கடினமாகிறது. காய்கறிகள், பழங்கள், புரதங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com