சத்து மிக்க தர்பூசணி விதைகள்: பயன்கள் மற்றும் உண்ணும் முறைகள்!

Watermelon seeds
Watermelon seeds

வெயில் காலம் என்றால் அனைவரின் வீட்டிலுமே தர்பூசணியை அடிக்கடி வாங்குவோம். அதேபோல் தர்பூசணி இப்போதுதான் விலை குறைவாகவும் விற்கப்படும். தர்பூசணி சாப்பிட்டுவிட்டு இனி விதைகளை மட்டும் தூக்கிப் போட்டு விடாதீர்கள். ஏனெனில் அதில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்தவகையில் தர்பூசணி விதைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பொதுவாக இந்த விதைகளில் ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிறிது கலோரிகள் ஆகியவை உள்ளன.

வறுத்த தர்பூசணி விதைகள்:

தர்பூசணி விதைகளை வறுத்து சாப்பிடுவதால் அதன் மொறுமொறுப்பு மற்றும் சுவை ஆகியவை அதிகரிக்கும். விதைகளை சுத்தம் செய்துவிட்டு, அதனை நன்றாக பரப்பி உப்பு ( விருப்பமுள்ளவர்கள் அதனுடன் மசாலா பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம்) சேர்த்துக் காய விடவும். பின் அதனை எடுத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வறுக்க வேண்டும். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது சிற்றுண்டிகள், உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.

பச்சை விதைகள்:

பச்சையான தர்பூசணி விதைகளை சுத்தம் செய்துவிட்டு அப்படியே சாப்பிடலாம். சாலட், தயிர் அல்லது தானியங்களில் கலந்து சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

முளைத்த விதைகள்:

தர்பூசணி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து முளைக்கவைத்து சாப்பிடலாம். இதில் மிகவும் சத்துக்கள் நிரம்பியுள்ளன. முளைக்கவைத்த விதைகளை சாண்ட்விச்களில் சேர்த்து சாப்பிடலாம்.

ஓட்ஸில் விதை:

டோஸ்ட் போன்ற உணவுகளிலும் இந்த விதைகளை சேர்த்து சாப்பிடலாம். அல்லது ஓட்ஸ்மீலில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
மனக்கவலைகளை மாற்றும் மகத்தான 9 உணவுகள்!
Watermelon seeds

அரைத்த விதைகள்:

இந்த தர்பூசணி விதைகளை அரைத்து அதனை ரொட்டி, குக்கீஸ் ஆகியவற்றில் சேர்த்து செய்யலாம். இதனால் விதையின் சுவைப் பிடிக்காதவர்கள் கூட எளிதாக சாப்பிடலாம்.

இந்த வழிகளிலெல்லாம் நீங்கள் தர்பூசணி விதைகளை எடுத்துக்கொள்ளலாம். இவற்றை காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதால் அதிக சத்துக்கள் நேரடியாகவே கிடைக்கும். அதேபோல் சிலர் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

தர்பூசணி விதைகளில் அதிகப்படியான கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன. அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் தேவையில்லாத கொழுப்புகள் தேங்கிவிடும். ஆகையால் ஒரு நாளைக்கு 30 கிராம் அளவு அல்லது ஒரு கப்பில் 3 பங்கு விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வாமை உள்ளவர்கள் முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com