கோடைக்கால வியர்க்குருவை இயற்கை முறையில் விரட்ட எளிய வழிகள்!

Boy with prickly heat
Boy with prickly heathttp://siragu.com

வ்வொரு வருடமும் வெயில் காலத்தில் கை, கால், கழுத்து என உடலின் அனைத்து பகுதிகளிலும் வியர்க்குரு அதிகமாக வரும். இதனால் ஏற்படும் அரிப்பைப் போக்க சொரியும்போது அந்த இடம் எரிய ஆரம்பித்து விடும். வியர்க்குருவை விரட்ட எவ்வளவு பவுடர் போட்டாலும் அரிப்பும் தீர்வதில்லை, வியர்க்குருவும் மறைவதில்லை.

உடலின் வெப்பநிலையை பராமரிப்பவை வியர்வை சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வை சுரப்பிகளின் மேல் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் வியர்க்குரு ஏற்படுகிறது. பார்ப்பதற்கு சின்ன பொரிப்பொரியாக இருக்கும் இந்த வியர்க்குரு, குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்படுகிறது. காரணம் குழந்தைகளின் சரும துவாரங்கள் மிகவும் நுண்ணியதாக இருப்பதால் வியர்வை துளிகள் தேங்கி வியர்க்குரு வெளிப்படும். மறைவான பகுதிகளான இடுப்பு, முதுகு, அக்குள், தொடைப் பகுதிகளில் அதிகம் வரும் வியர்க்குருவை விரட்ட போடப்படும் பவுடர்கள் எல்லாம் சரும துவாரங்களை அடைத்து விடுவதால் வியர்க்குரு அதிகமாகுமே தவிர குறையாது. போடும் சமயம் இதமாக இருப்பது போல் தோன்றினாலும் அதனால் தீர்வு என்பது கிடைக்காது.

வியர்க்குருவை விரட்டுவதற்கான வழிகள்:

1. முக்கியமாக, வியர்க்குருவை தேய்ப்பதோ, சொரிவதோ கூடாது.

2. குளிக்கும் சமயம் சோப்பை நேரடியாக சருமத்தில் தேய்க்கக் கூடாது. கைகளில் சிறிது நீர் விட்டுக் கொண்டு சோப்பை தேய்த்து பிறகு சோப்பு கைகளால் உடலில் தேய்த்து குளிப்பது சிறந்த முறையாகும்.

3. குளித்து முடித்ததும் துண்டால் அழுத்தித் தேய்த்து துடைக்காமல் லேசாக ஒற்றி எடுப்பது நல்லது.

4. நுங்கு கோடைக்கேற்ற சிறந்த குளிர்ச்சி தரும் உணவு. இதை சாப்பிடுவதுடன் அதன் உள்ளிருக்கும் நீரை வியர்க்குருவின் மேல் தடவி வர, வியர்க்குரு கட்டிகள் காணாமல் போய்விடும்.

5. வெட்டிவேர் பவுடர் மற்றும் திரிபலா பொடியை நீரில் கரைத்து தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறையும்.

6. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அருகன் தைலம், தூர்வாரி தைலம் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்க, வியர்க்குரு பிரச்னை தலை தூக்காது.

7. சந்தன பவுடருடன் பன்னீர் மற்றும் மஞ்சள் பொடி சிறிது சேர்த்து நீர் விட்டு குழைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்ள கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் வியர்க்குரு குணமாக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்கு அழகு தரும் 5 வகை ஜன்னல் திரைவலைகள்!
Boy with prickly heat

8. வெயிலில் அதிக நேரம் அலைவதை குறைத்துக் கொள்வதும், பருத்தி ஆடைகளை அணிவதும், உடல் குளிர்ச்சி பெற வாரம் இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதும் நல்ல பலனைத் தரும்.

9. கற்றாழையின் உள்பகுதியை எடுத்து உடலில் தேய்த்து குளிக்க வியர்வை பிரச்னை தீர்வதுடன் வேர்க்குரு வருவதும் குறைந்து விடும்.

10. வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு கரண்டி தயிர் சேர்த்து விழுதாக அரைத்து உடலில் தடவி தேய்த்துக் குளிக்க அரிப்பு, வியர்க்குரு போன்ற சரும பிரச்னைகள் எளிதில் தீர்ந்து விடும்.

11. முல்தானி மெட்டி இரண்டு ஸ்பூன் எடுத்து ரோஸ் வாட்டர் விட்டு கலந்து குழைத்து அதை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தடவ அரிப்பு, எரிச்சல் போவதுடன் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com