ஆணோ பெண்ணோ... 50 வயது ஆகிவிட்டதா? எலும்பு சத்து குறைபாடு வருமே!

Bone deficiency
Bone deficiency
Published on

- கவிதா

டல் ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை கொள்ளும் பலர் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. எனவேதான் வயது முதிர்வின்போது மூட்டு வலியால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எலும்புகள் நம் உடலுக்குச் சமநிலையை வழங்கக்கூடியப் பணியைச் செய்கின்றன. எனவே, எலும்புகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இப்போதெல்லாம், 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பலர் உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

எலும்பு சத்து குறைபாடு என்பது எலும்புகளைப் பலவீனமாக்கக் கூடியதாகும். பலர் தங்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்ட பின்னரே இதுபோன்ற எலும்பு சத்து குறைபாடு இருப்பதை தெரிந்துகொள்ளும் நிலை உள்ளது. மேலும், பலரும் இது பெண்களுக்கு மட்டுமே வரும் நோய் என்று நம்பி உள்ளனர். ஆனால் இது ஆண்களுக்கும் வரும்.

எலும்பு சத்து குறைபாடு என்பது என்ன? எலும்பு சத்து குறைபாடு வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.

எலும்பு சத்து குறைபாடு காரணமாக எலும்புகள் மெல்லியதாகி அவை உடைந்து போகின்றன. இந்த நோய் உள்ளவர்கள், எலும்புமுறிவுகளால் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள். புகை பிடிப்பவர்கள், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், உடற்பயிற்சிகள் இ்ல்லாத வாழ்க்கை முறை, தைராய்டு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையில் உள்ளவர்கள் ஆகியோர்க்கு எலும்பு சத்து குறைப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

குறைந்த வயதில் மாதவிடாய் நின்று போதல், மரபியல் சார்ந்த மற்றும் தைராய்டு சுரப்பி பிரச்னை, முடக்கு வாதம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்னை, வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்கள் மாற்ற இயலாத ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
மூலநோய்க்கு முடிவு கட்ட என்ன செய்ய வேண்டும்?
Bone deficiency

50 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பு சத்து குறைபாடு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். வயதாகும்போது ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டுவலி மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்னைகளை அனுபவிக்கக்கூடாது எனில், கால்சியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான பெரியவர்கள் தினமும் குறைந்தபட்சம் 1,300 மி.கி கால்சியத்தை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் வயதானவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் இளம் பருவத்தினர் அதிக கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எலும்பு சத்து குறைபாட்டைப் போக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள்:

செலரி, எள், கசகசா மற்றும் சியா போன்ற விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே, விதைகளைச் சாப்பிடுவது உடலில் கால்சியம் அளவை அதிகரிக்க உதவும்.

சீஸ், பால், தயிரில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளது. பீன்ஸ், கீரை, பச்சை காய்கறிகள், கோஸ், உலர்ந்த அத்திப்பழம், பாதாமில் அதிக கால்சியம் நிறைந்துள்ளது. தினசரி இவற்றில் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்வது உடலில் கால்சியம் அளவைப் பராமரிக்க உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் உட்கொள்வது, உடற்பயிற்சி, கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, அவ்வப்போது, பரிசோதனைகள் மூலம் ஒருவர், தமக்கு எலும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இல்லையா? என்பதை அறிந்துகொள்வது எல்லாம் அவசியம்.

இதன் மூலம் எலும்பு முறிவுகள், நடக்கமுடியாமல் போவது, மருத்துவச் செலவினங்கள் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com