பழங்கள், காய்கறிகள் சாப்பிட்டே உடல் எடை குறைக்கலாம் என நினைப்பவர்கள் ஜாக்கிரதை!

Fruits and vegetables
Fruits and vegetables

உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்களில் சிலர் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டே உடல் எடையைக் குறைக்கலாம் என நினைப்பார்கள். இது தவறில்லை என்றாலும் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது சில பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இந்த பதிவில், இத்தகைய முயற்சி எப்படி நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் என விரிவாகப் பார்க்கலாம். 

ஒருவர் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட ஆரம்பிக்கும்போது பல பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது. நம் உடலுக்கு சரிவிகித அளவில் சத்துக்கள் கிடைத்தால்தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே எல்லா சத்துக்களும் நிறைந்த உணவுதான் நம் உடலுக்குத் தேவை. ஆனால் ஒருவர் வெறும் பழங்கள், காய்கறிகளை மட்டுமே சாப்பிடும்போது உடல் தசைகள் பலவீனமடையும். மேலும் உடலுக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரத்தத்தில் குறைபாடு ஏற்படுவதால், ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். 

ஒருவருக்குத் தேவையான சரவிகித உணவு என்பது உடலுக்கு தேவையான புரதங்கள், விட்டமின்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் போன்றவை கொண்ட உணவாகும். இவை அனைத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் கிடைப்பதில்லை. காய்கறிகள் பழங்களுடன் சேர்த்து பருப்பு வகைகள், பால் பொருட்கள் போன்ற உணவுகளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

எனவே தினசரி வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம் என்று முயற்சி தவறானது. அது உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தி, தசை இழப்பை ஏற்படுத்தலாம். இதனால் நீங்கள் உடல் எடை குறைந்தது போல உணர்ந்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் கெடுதலானது. 

எனவே தினசரி எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் படியான சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள முற்படுங்கள். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது மட்டுமே உங்களுக்கு நிலையான பலன்களை அளிக்கும். உடலை வருத்திக் கொண்டும், ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டும் உடல் எடையைக் குறைக்க ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com