கண்களை அடிக்கடி தேய்த்துக்கொண்டே இருப்பதால், கண்களின் ஆரோக்கியம் கெடும். மேலும் இது பல பாதுப்புகளையும் ஏற்படுத்தும். இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.
இப்போது பலருக்கும் கண் பிரச்னை, தொற்று போன்றவை ஏற்படுகிறது. இதனால் கண்களைத் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு. இதனால், ஏற்படும் விளைவுகளைக் குறித்துப் பார்ப்போம்.
ஒவ்வாமைகள்:
கண்களில் ஒவ்வாமை ஏற்படும்போது அதனுடன் தும்மல், கண்களில் நீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் மருந்து எடுத்துக்கொள்வதாலும், சில உணவுகள் மற்றும் பூச்சி கடிகள் போன்றவற்றாலும் ஒவ்வாமை ஏற்பட்டு கண்கள் சிவக்கும். மேலும் சில சமயம் தூசி, அழுக்கு போன்றவற்றால் அரிப்பு ஏற்படும்.
காயங்கள்:
கண்களை அடிக்கடி அழுத்தித் தேய்ப்பதால், கண் பார்வையில் கூட பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கண்கள் தொடர்ந்து வலித்தல், கூசுதல், தெளிவில்லாத பார்வை, பார்வை மங்கல், தலைவலி, குமட்டல், மயக்கம், கண்கள் வறட்சி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அனுகுங்கள்.
ஒளி:
கண்களில் அரிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஒளிதான். இப்போது பலரும் கணினி மற்றும் போனில் மட்டுமே வேலை செய்கிறார்கள். கிட்டத்தட்ட 8 முதல் 10 மணி வரை வேலைப் பார்க்கிறார்கள். இந்த அதிக ஒளி கண்களில் அரிப்பை ஏற்படுத்துகிறது. அதிக நேரம் நாம் வெளிச்சத்தில் கண்களை ஈடுபடுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்பட்டு கண் அரிப்பு ஏற்படுகிறது. சாதாரணமாக ஏற்படக்கூடிய சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றின் காரணமாக கூட கண் அரிப்புகள் ஏற்படலாம்.
விரல் அழுக்குகள்:
கண்களில் அரிப்பு ஏற்படும்போது அதனை மேலும் தேய்க்கக் கூடாது என்று பலர் கூறுவார்கள். அதற்கு காரணம் தேய்க்கும்போது விரல்களில் இருக்கும் அழுக்குகள் கண்களில் பரவி பாதிப்பு ஏற்படுத்தும். நம் விரல்களில் இருந்து பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகள் கண்களுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இது அபாயம் மற்றவர்களுக்கும் பரவலாம்.
இதுபோல கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.