காலையில் எழுந்ததும் ஒரு காபி அல்லது டீ இல்லாமல் பலரது நாள் தொடங்கவே தொடங்காது. இந்த பானங்கள் நம்மை உற்சாகப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் என நம்புகிறோம். ஆனால், இந்த பானங்களில் உள்ள காஃபின் நமது உடலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். ஒரு மாதம் இந்த பானங்களைத் தவிர்த்தால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
காபி மற்றும் டி-யில் உள்ள காஃபின் நம் தூக்க சுழற்சியை பாதித்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். இந்த பானங்கள் குடிப்பதை நிறுத்தும்போது, நம் தூக்கம் ஆழ்ந்ததாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.
காபி குடித்தவுடன் கிடைக்கும் ஆற்றல் உடனடியாகவே குறைந்து விடும். ஆனால், காபியை விட்டுவிட்டு உடலின் இயற்கையான ஆற்றல் மூலத்தை நம்பும்போது, நாள் முழுவதும் நிலையான ஆற்றல் கிடைக்கும்.
காபி மற்றும் டீ உடலில் உள்ள நீரை இழக்கச் செய்யும். இதனால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். இந்த பானங்களுக்கு பதிலாக தண்ணீர் அருந்தும்போது உடல் முழுவதும் நீரேற்றம் ஏற்பட்டு பல நோய்கள் தடுக்கப்படும்.
காஃபின் நம்மை பதட்டமாகவும், கவலை உணர்வுடனும் இருக்கச் செய்யும். இந்த பானங்களை குடிப்பதை நிறுத்தும்போது மனதில் அமைதி ஏற்பட்டு பதட்டம் குறையும்.
இந்த பானங்களை தொடர்ச்சியாக குடிப்பதால் வயிற்றில் அமிலத்தன்மை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இந்த பானங்கள் குடிப்பதை நிறுத்தும்போது செரிமானம் சீராக்கி வயிற்றுப் பிரச்சனைகள் குறையும்.
அதிக அளவில் டீ, காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். காபி குடிப்பதை நிறுத்தும்போது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
சிலருக்கு காபியை திடீரென நிறுத்தும்போது தலைவலி ஏற்படலாம். ஆனால், சில நாட்களில் இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். மேலும், இதனால் உங்களுடைய மனநிலை மேம்பட்டு மன அழுத்தம் குறையும்.
டீ, காபிகள் உள்ள சில பொருட்கள் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இவற்றை ஒரு மாதத்திற்கு முற்றிலுமாக தவிர்க்கும் போது சருமம் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஒரு மாதத்திற்கு டீ மற்றும் காபி குடிப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் நம்ப முடியாதவையாக இருக்கும். அது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு அளிக்கும் என்பதால், இதை முயற்சித்துப் பாருங்கள். ஆனால், நீங்கள் நினைப்பது போல இந்த பழக்கத்தை மாற்றுவது எளிதானது அல்ல. ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருந்தாலும், உங்களுடைய ஆரோக்கியத்திற்காக இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.