Copper T பெண்களுக்கு பாதுகாப்பானதா? முழு விவரங்கள் இதோ! 

Copper T
Copper T
Published on

பெண்கள் தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதுகாத்து, திட்டமிடப்பட்ட குடும்பத்தை உருவாக்க பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்றுதான் காப்பர்-T (Copper-T). இது ஒரு நீண்டகால கருத்தடை சாதனம். இது எவ்வாறு செயல்படுகிறது? உண்மையிலேயே பெண்களுக்கு இது பாதுகாப்பானதா? என்பதைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை இந்தப் பதிவில் தெளிவாகப் பார்க்கலாம். 

காப்பர்-T என்றால் என்ன? 

காப்பர்-T என்பது ஒரு சிறிய T வடிவ கருத்தடை சாதனம். இது தாமிரத்தால் செய்யப்பட்டிருக்கும். இந்த சாதனம் கருப்பைக்குள் வைக்கப்பட்டு கருத்தரிப்பைத் தடுக்கிறது. இது ஒரு நீண்டகால கருத்தடை முறையாகும். இதை ஒரு முறை பொருத்திக் கொண்டால், பல ஆண்டுகள் வரை கருத்தரிப்பைத் தடுக்கலாம். 

காப்பர்-T எவ்வாறு செயல்படுகிறது? 

காப்பர் டி தாமிரபத்தால் செய்யப்பட்டது என்பதால், இது விந்து செல்களைக் கொல்கிறது. இதனால், விந்து செல் கருமுட்டையை சென்றடைய முடியாமல் கருத்தரிப்பு தடுக்கப்படுகிறது. மேலும், இது கருப்பை வாய் திறப்பை தடிமனாக்கி விந்துகள் உள்ளே செல்ல முடியாமல் தடுக்கிறது. 

காப்பர்-T பல வகைகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு வகையும் அதன் அளவு, தாமிரத்தின் அளவு மற்றும் கருப்பையில் இருக்கும் கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். மருத்துவர் உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் தேவைகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற சரியான வகையைப் பரிந்துரைத்து பொருத்துவர். இதை வைப்பதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படும். இந்த செயல்முறைக்கு சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். அதேபோல காப்பர்-T யை நீக்குவதற்கும் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். 

காப்பர்-T யின் நன்மைகள்: 

காப்பர்-T பல ஆண்டுகள் வரை கருத்தரிப்பைத் தடுக்கிறது. நீங்கள் எதிர்காலத்தில் குழந்தை பெற விரும்பினால், இதை நீக்கிய உடன் பழைய கருவுறுதல் நிலைக்கு திரும்புவீர்கள். இந்த சாதனம் எவ்வித ஹார்மோனையும் கொண்டிருக்காது. இதனால் ஹார்மோன் சார்ந்த பக்க விளைவுகள் ஏற்படாது. இது மிகவும் ஆற்றல் மிக்க கருத்தடை முறையாகும். நீண்ட காலத்திற்கு இதை நீங்கள் பயன்படுத்தினாலும் இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 

இதையும் படியுங்கள்:
தக்காளியை சில நாட்கள் கெட்டுப்போகாமல் பத்திரமாக வைக்க சில டிப்ஸ்..!
Copper T

ஆனால் சிலருக்கு, காப்பர்-T பொருத்திய முதல் சில மாதங்களில் கடுமையான ரத்தப்போக்கு ஏற்படலாம். இந்த சாதனத்தை வைத்த பிறகு அல்லது நீக்கிய பிறகு அதிக வலி ஏற்படலாம். மிகவும் அரிதாக காப்பர்-T கருப்பைத் தொற்றை ஏற்படுத்தும். சிலருக்கு அது கருப்பையில் சரியாக பொருந்தாமல் வெளியே வந்துவிடும். இதனால், பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். 

இந்த முறை முற்றிலும் பாதுகாப்பான முறையாகும். எனவே, பெண்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com