சாதாரண நீரைவிட ஹைட்ரஜன் நீரிலேயே அதிகப்படியான பலன்கள் உள்ளதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நீரின் பல்வேறு பரிமாணங்களில் ஒன்று, இந்த ஹைட்ரஜன் நீர். அந்தவகையில், ஹைட்ரஜன் நீர் என்றால் என்ன? மற்றும் அதன் பயன்கள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக, நீரில் இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் இருக்கும். இதனை H20 என்று சொல்வார்கள். இதுவே, இந்தக் கூறுகளில் இன்னும் அதிகமான ஹைட்ரஜன் மூலக்கூறுகளை சேர்த்தால், அதுதான் ஹைட்ரஜன் நீர். ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை விட, ஹைட்ரஜன் மூலக்கூறுகளையே உடல் வேகமாக உறிஞ்சுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான், சாதாரண நீரைவிட ஹைட்ரஜன் நீர் மிகவும் ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது.
இருப்பினும் கூட, உலகம் முழுவதும் இந்தத் தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்ற விவாதங்கள் எழுந்தன. அந்த விவாதங்களின் முடிவில், இந்த நீரை அனைவருமே குடிக்கலாம் என்று சொல்லப்பட்டது.
ஹைட்ரஜன் நீரின் பலன்கள்:
அதிக ஆற்றல் தரும் நீர்:
இந்த ஹைட்ரஜன் நீர் உடலுக்கு அதிகப்படியான ஆற்றலைத் தருகிறது. அதனாலேயே, இந்த நீரை பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வழக்கமாகக் குடிக்கின்றனர். அதேபோல் இது உடலில் உள்ள நீர்சத்துக்களை விரைவில் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.
உடல் செல்களை பாதுகாக்கிறது:
இந்த ஹைட்ரஜன் நீர், ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடன்டாக விளங்குகிறது. இது செல்களில் இருக்கும் எலக்ட்ரான்களை நச்சு பொருட்கள் சிதைக்காமல் தடுக்கிறது. இது உங்கள் உடல் முழுவதும் இருக்கும் செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.
சரும ஆரோக்கியம்:
இந்த நீரை குடிப்பதால், சருமத்தில் உள்ள ஹைட்ரேட்டுகள் அதிகரிக்கிறது. இதனால், சருமம் இளமையாக இருப்பதோடு, அலர்ஜிகளைத் தடுத்து, தெளிவான மற்றும் மென்மையான சருமத்தைக் கொடுக்கிறது.
மூளையின் பாதுகாப்பு:
இந்த நீர், மூளையை நரம்பியல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த பாதுகாக்கும் முறை, உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகளவு ஏற்படும்போது நிகழ்கிறது.
உடல் எடையை குறைக்கிறது:
இதனை தினமும் குடித்து வந்தால், உடம்பில் உள்ள கொழுப்புகள் குறைந்து, எடையை குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இது குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை குறைக்கவும் உதவுகிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவும் குறைகிறது.
இந்த ஹைட்ரஜன் நீர் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகிவற்றையும் சரிசெய்து, இருமடங்கு மன வலிமையுடன் இருக்க உதவுகிறது. இருப்பினும், தினமும் எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள், ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.