ஹைப்போ தைராடிஸம் என்றால் என்ன?

What is hypothyroidism?
What is hypothyroidism?https://manithan.com/

முதலில் தைராய்டு என்றால் என்னவென்று பார்க்கலாம். தைராய்டு நம் கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு சின்ன பட்டாம்பூச்சி வடிவத்திலான சுரப்பி. இது இரண்டு பெரும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. அவை: தைராக்ஸின் (T-4), டிரையடோ தைரானின்(T-3).

இந்த இரண்டு ஹார்மோன்களும் நம் உடலின் எல்லா உறுப்புகளுக்குமே தேவையான ஒன்றாகவே உள்ளது. இந்த ஹார்மோன் உடலில் உள்ள வெட்பநிலை, இதய துடிப்பின் அளவு, நம் உடலுக்கு எவ்வளவு புரதம் தேவை என்பது போன்ற முக்கியமான விஷயங்களைக் கட்டுப்பாட்டில் வைக்கக் கூடியதாகும்.

ஹைப்போ தைராடிஸம் என்றால் என்ன?

ஒருவருக்கு தைராய்டு சுரப்பி போதுமான அளவில் தைராய்டு ஹார்மோனை சுரக்காதபோது, ஹைப்போ தைராடிஸம் என்ற நிலை ஏற்படுகிறது. இது இருப்பதற்கான அறிகுறிகள் ஆரம்ப காலக்கட்டத்தில் பெரும்பாலும் தெரியாது. இதை கண்டுகொள்ளாமல் விடுவதால் கொலஸ்ட்ரால் மற்றும் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஹைப்போ தைராய்டை எப்படி கண்டறிவது: ஹைப்போ தைராய்ட் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிய முறையில் இரத்த பரிசோதனை மூலம் அறியலாம்.

ஹைப்போ தைராடிஸத்திற்கான அறிகுறிகள்: அதிகமான சோர்வு, வறட்சியான சருமம், உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் சரிவர வராதது, அதிகப்படியான முடி கொட்டுதல், மறதி பிரச்னை, மன அழுத்தம்.

ஹைப்போ தைராடிஸம் குழந்தைகளுக்கும் வருமா?

தைராய்டு பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பிறந்த குழந்தைகளும் இதில் அடங்கும். பிறக்கும் குழந்தைகள் சில சமயங்களில் தைராய்டு சுரப்பி இல்லாமலேயே பிறக்கும் அல்லது தைராய்டு சுரப்பி இருந்தும் தைராய்டு சுரக்காமல் இருக்கும். இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாகவே தெரிய வரும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் குறைவு, உடல் எடை கூடாமல் இருப்பது, கரகரப்பான அழுகை, வறண்ட சருமம் போன்ற அறிகுறிகள் தென்படும். இதை கவனித்து சரி செய்யாமல் விட்டால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன வளர்ச்சியில் பிரச்னைகள் வரலாம்.

தைராய்டு குறைபாடு - காரணங்கள் மற்றும் ஏற்படும் நோய்கள்: ஆட்டோ இம்யூன் நோய்தான் தைராய்டு குறைபாட்டால் பரவலாக ஏற்படும் ஒரு நோயாகும். இதை, ‘தன்னுடல் தாக்கு நோய்’ என்று கூறுவர். கேன்ஸருக்கான கதிர்வீச்சு சிகிச்சை செய்வதனால் கழுத்து பகுதியில் உள்ள தைராய்டு பாதிக்கப்படுவதால் ஹைப்போ தைராடிஸம் வரும். நோய் தொற்றினால் தைராய்டு வீங்கி அதனுடைய எல்லா சுரப்பிகளையும் தைராய்டு அதிகமாக சுரந்துவிடும். இதை ஹைப்பர் தைராடிஸம் என்பார்கள்.

நிறைய மருந்துகள் பயன்படுத்துவதும் தைராய்டு குறைப்பாட்டிற்கு காரணமாக அமையும். அதில் ஒன்று லித்தியமாகும். இது மன நோய் பாதிப்பிற்கு கொடுக்கப்படும் மருந்தாகும். எந்த மருந்தாயினும் மருத்துவரிடம் ஆலோசித்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தைராய்டு குறைபாடுகள் வரும்.

தைராய்டு சுரப்பதற்கு அயோடின் மிகவும் அவசியமான தனிமம் ஆகும். அயோடின் குறைபாட்டால் ஹைப்போ தைராடிஸம் வரும். அயோடின் கடலில் இருந்து தயாரிக்கப்படும் உப்பில் அதிகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
’நீர்த்த தங்கம்’ எனும் ஆலிவ் ஆயிலின் மகிமை தெரியுமா?
What is hypothyroidism?

தைராய்டு குறைபாடு யாருக்கெல்லாம் வரக்கூடும்: பெண்களுக்கு அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் முன்பே யாருக்கேனும் இருப்பின் வருவதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உண்டு. தைராய்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இந்த குறைபாடு வரும்.

ஹைப்போ தைராடிஸத்திற்கான மருத்துவ சிகிச்சை முறை என்ன?

ஹைப்போ தைராடிஸத்தை சரி செய்வதற்கான சிகிச்சை முறை, தினமும் ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கான மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப் பேரில் எடுத்து கொள்வதேயாகும். இது தைராய்டு குறைபாட்டை சரிசெய்ய உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com