குருத்தணுக்கள் என்றால் என்ன? குருத்தணுக்களைப் பெறுவது எப்படி?

குருத்தணுக்கள் என்றால் என்ன?
குருத்தணுக்களைப் பெறுவது எப்படி?

ந்த மாதம் 23 ஆம் தேதியன்று செய்தித்தாளில் வந்த ஒரு தகவலைப் படிக்க வியப்பாக இருந்தது. ஜெர்மனியில் ஒரு 53 வயது ஆண், கடந்த 10 வருடங்களாக HIV, அதாவது, AIDS நோயிலிருந்து விடுபட்டு தற்பொழுது நோய்நொடி இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்ற செய்திதான் அது. உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களை ஆட்டிப்படைக்கும் இந்த நோயிலிருந்து முற்றிலுமாக விடுபட்ட இவர் உலகின் 5 ஆவது நபர் ஆவார். இது எவ்வாறு சாத்தியமாயிற்று? இந்த அதிசயத்தின் பின்னணி Stem Cell therapy எனப்படும்.  குருத்தணுக்கள் சிகிச்சை முறையாகும்.

குருத்தணுக்கள் என்பவை என்ன? அவை மருத்துவ சிகிச்சையில்  எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பற்றி அறிந்துகொள்ள இந்தக் கட்டுரையில் முயற்சி செய்வோம்.

குருத்தணுக்கள் என்பவை நமது உடலில் இருக்கும் சில விசேடமான திசுக்கள் (cells) ஆகும்.இவை வளர்ச்சி அடையாத cells ஆகும். இவை தங்களைப்போல பிற குருத்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும். மேலும், இவை உடலின் 210 விதமான அணுக்களாகவும், தேவையான தருணத்தில், தன்னை உருமாற்றிக் கொள்ளும். உடம்பில் பழுதடைந்த cellsகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு, அவற்றைப் புதுப்பித்து cellகளை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தக் குருத்தணுக்களை எவ்வாறு பெற முடியும்?

குழந்தை  பிறந்தவுடன் தொப்பிள் கொடியின் இரத்தம் மற்றும் cellsலிருந்தும், bone marrow, கொழுப்பு cellsகள் , placental cells, dental pulp ஆகியவற்றிலிருந்தும்  இந்த குருத்தணுக்கள் கிடைக்கும்.

குருத்தணுக்களை சிகிச்சைக்கு வெகு காலமாக உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். 30 வருட காலமாக Leukemia (இரத்த புற்று நோய்), Lymphoma (நிணநீர் குழிப்புற்றுநோய்), autoimmune disease (தன்னுடல் தாக்கி நோய்) போன்ற நோய்களுக்கு இந்தச் சிகிச்சையை கையாள்கிறார்கள்.

இந்தியாவில்  இவ்வகை சிகிச்சை 65 - 85 % பயனுள்ளதாக இருக்கின்றது. இந்தச் சிகிச்சையின் பலனானது  அது அளிக்கப்படும் முறை, நோயாளிகளின் நிலைமை, அவர்களிடம் காட்டும் அணுகுமுறை இவற்றின் அடிப்படையில் மாறுபடும்.

இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில மருத்துவமனைகளில்தான் இந்தச் சிகிச்சை வழங்கப் படுகிறது. இதன் கட்டணம் லட்சக்கணக்கில் இருப்பதால் சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. இதனால் இந்தச் சிகிச்சை முறை கொடிய பல நோய்களால் அவதிப்படும் குடும்பங்களுக்கு,  அவர்கள் தங்கள் உடைமைகளையும் சொத்து பத்து ஆகியவற்றையும் விற்றும், நெருங்க முடியாத இடத்தில் தான் இருக்கிறது.

எல்லா குடும்பங்களும் இம்மாதிரி சூழலில் health insurance (உடல் நலக் காப்பீடு) எடுத்துக்கொள்வது அத்தியா வசியமான ஒன்றாகிறது. அதுவும் இம்மாதிரியான சிகிச்சை முறையை ஆதரிக்கும் காப்பீடு அவசியம்.

சமீப காலமாக Cord Blood Banking, அதாவது தொப்பிள் கொடி இரத்த காப்பீடு  என்பது மிக அதிகமாக பிரசாரம் ஆகிறது. இது தொப்பிள் கொடியிலிருந்து குருகுத்தணுக்களை சேமித்து வைத்து, பிற்காலத்தில் அதனை  உபயோகப்படுத்துவதற்காக வழங்குவார்கள். கொடிய நோய் ஏதாவது, அந்தக் குழந்தைக்கோ, அல்லது அதன் பெற்றோருக்கோ, உடன் பிறப்பிற்கோ வந்துவிட்டால், இவ்வாறு சேமித்து வைத்த குருத்தணுக்களைப் பெற்று சிகிச்சை பெற முடியும். இத்தகைய முயற்சியை சாமானிய மனிதர்களுக்கு அரசுதான் வழங்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com