நம் உடலில் ஏற்படும் பல வகையான நோய்களுக்கு நம்மை சுற்றியே மருந்துகள் இருக்கின்றன. இதை அறிந்த நம் முன்னோர்கள் அவர்களை சுற்றியுள்ள பல மூலிகை செடிகளை பயன்படுத்தி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். இந்த நவீன காலத்தில் நம்முடைய உணவு பழக்க வழக்கம் மாறியதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன.
நம் தோட்டத்தில் அல்லது வீட்டை சுற்றி பல செடிகள் இருக்கும். இதை நாம் களை செடிகள் என்று பிடுங்கி எறிந்து விடுவோம். அந்த வகையில் நம்மில் பலரும் இந்த சொடக்கு தக்காளி செடியை பார்த்திருப்போம். ஆனால் இதன் பயன்கள் பற்றி தெரியாமல் களை செடி என்று பிடுங்கி எறிந்திருப்போம். நாம் இந்த பதிவில் சொடக்கு தக்காளியின் பயன்கள் பற்றி காணலாம்.
சொடக்கு தக்காளி:
சொடக்கு தக்காளியை சிறு தக்காளி என்று கூறுவார்கள். கிராமப்புறங்களில் இதை பறித்து தலையில் வைத்து அழுத்தி விளையாடும் போது, 'சொடக்கு' என்று சத்தம் வரும். இதனால் இது சொடக்கு தக்காளி என பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இது cutleaf groundcherry, bladder cherry, ground cherry, Indian gooseberry weed, mullaca, native gooseberry, wild tomato என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
சொடக்கு தக்காளி பயன்கள்:
சொடக்கு தக்காளியை தினசரி காலை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் அளவு அதிகரிக்கும். இதனால் எலும்புகள் வலுவடையும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
சொடக்கு தக்காளியில் வைட்டமின் C உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும் சொடக்கு தக்காளியில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் K உள்ளது.
உடல் வலி, மூட்டு வலி உள்ளவர்கள், நீரில் சொடக்கு தக்காளி இலை, காய், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் உடல் வலி, மூட்டு வலி தீரும்.
மேலும் ஆறாத புண்கள் இருந்தால் இந்த சொடக்கு தக்காளி இலையை அரைத்து புண்கள் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக சொடக்கு தக்காளி உள்ளது. காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
இதில் உள்ள வைட்டமின் B நரம்பு மண்டலத்தை பாதுக்காக்கிறது. மேலும் சொடக்கு தக்காளி புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
சொடக்கு தக்காளி வெளிநாட்டு சந்தையில் ஒரு கிலோ ரூ.3000 வரை விற்கப்படுகிறது.