விஷக்கடிக்கு உடனடியாக என்ன முதலுதவி செய்யலாம்?

விஷஜந்துக்கள்
விஷஜந்துக்கள்

1. கரப்பான் பூச்சி

கரப்பான்பூச்சி
கரப்பான்பூச்சி

பொதுவாகவே வீடுகளில் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். சமையலறை குளியலறை என அனைத்துப் பகுதிகளிலுமே உலாவிகொண்டே தான் இருக்கும். கரப்பான் பூச்சி கடித்தால் உடனடியாக ஐஸ் கட்டிகளை ஒரு சுத்தமான துணி அல்லது துண்டில் போர்த்தி, கடித்த இடத்தில் 10-15 நிமிடங்கள் தடவவும். இது வீக்கத்தைக் குறைத்து, அரிப்புகளை போக்க உதவுகிறது.

2. தேனீ

தேனீ
தேனீ

தேனீ கொட்டியதற்கு தேன் கொண்டு முதலுதவி செய்வது ஒரு சிறந்த தீர்வாகும். தேன், நஞ்சை நீர்த்து போக உதவுகிறது. மேலும் இது தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தேனின் இதமான தன்மையானது பாதிப்பு உண்டாக்கும் ஆபத்துகளைப் விரைவாகப் போக்க உதவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட இடத்தில், சிறிதளவு தேனை பயன்படுத்தி தடவி விடவும்.

3. குளவி

குளவி
குளவி

குளவி கடித்தால் அதன் விஷமானது ஊடுருவாமல் உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியமாகும். பொதுவாகவே விஷத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும் தன்மை பேக்கிங் சோடாவில் அதிகம் இருக்கிறது. அதோடு இது வலி, வீக்கம், சருமம் சிவத்தல், அரிப்பு போன்றவற்றையும் எளிதில் கட்டுப்படுத்தும். பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து குழைத்து குளவி கொட்டிய இடத்தில் பூசலாம். மேலும், குளவியின் விஷத்தன்மையை உடலிலிருந்து நீக்குவதற்கு வினிகரை சிறிதளவு தண்ணீரில் கலந்து குளவி கொட்டிய இடத்தில் தடவலாம்.

4. பூரான்

பூரான்
பூரான்

பொதுவாகவே பூரான் கடித்த இடத்தில் தடிப்பு ஏற்படும். பின்னர் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படும். சொரியும் பொழுது புண் ஏற்பட்டால் விஷம் அதிகமாக பரவியுள்ளது என்பதைக் கண்டறியலாம். பூரான் கடித்த இடத்தில் அதிகமாக அரிப்பு இருக்கும் இடங்களில் மண்ணெண்ணெய் விட்டு நன்றாக தேய்த்தால் தடிப்புகள் மறையக்கூடும்.

5. பெருச்சாளி

பெருச்சாளி
பெருச்சாளி

பெருச்சாளிக் கடித்த இடத்தில் மஞ்சள், உப்பு, மிளகு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நன்றாக அரைத்து கடித்த இடத்தில் பத்தாகப் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் பெருச்சாளியின் விஷம் உடலில் ஊடுருவாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

6. சிலந்தி

சிலந்தி
சிலந்தி

சிலந்தி பூச்சி கடித்த இடத்தில், ஆடாதோடை இலை 25 கிராம், பச்சை மஞ்சள் அதோடு மிளகு இவை அனைத்தையும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்த்தால் குணமாகும்.

7. எலி

எலி
எலி

லி கடித்தால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது வழக்கம் தான். அந்த சமையத்தில் குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் ஓரிரு நாட்கள் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் எளிதில் முறியும்.

8. கம்பளி பூச்சி

கம்பளி பூச்சி
கம்பளி பூச்சி

யல்பாகவே கம்பளி பூச்சியின் ரோமம் உடலில் பட்டாலே உடல் முழுதும் அரிப்பு ஏற்படும். எனவே நல்லெண்ணெயை உடலில் தடவினால் அரிப்பும் நீங்கும் அதோடு வலியும் குறையும். அதுமட்டுமின்றி முருங்கை இலையை அரைத்து தடவினாலும் அரிப்பு குறையும். இல்லையேல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் வெற்றிலையை வைத்து சாறு வரும் வரை தேய்த்தாலும் கூட அரிப்பு குறையும்.

9. அரணை

அரணை
அரணை

ரணை நக்கிச் சென்றாலே விஷம் தான். இதற்கு சீமை அகத்தி இலையை நன்கு அரைத்து பின் அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து அந்த இடத்தில் தடவினால் விஷம் குறையும். அதோடு பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட்டால் போதும் உடனடியாக விஷம் முறியும்.

10. நாய்

நாய்
நாய்

நாய்களின் எண்ணிக்கை என்பது அதிகமாகி வருவது பெரும் தொல்லைதான். அதிலும் குறிப்பாக தெரு நாய்கள் நடமாட்டமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. நாய் கடித்த இடத்தில் முதலில் சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 500 மில்லி தண்ணீரில் போட்டு கஷாயம் செய்து குடித்தால் நாய் கடியால் ஏற்பட்ட விஷம் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com