விட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க சரியான வயது என்ன? 

Vitamin supplements
Vitamin supplements!
Published on

ஒருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு விட்டமின்கள் மிகவும் முக்கியம். நாம் உண்ணும் உணவின் மூலமாகவே பெரும்பாலான விட்டமின்களைப் பெறுகிறோம். ஆனால், சில சமயங்களில் உணவில் விட்டமின்கள் குறைவாக இருக்கலாம் அல்லது நமது உடல் அவற்றை முழுமையாக உறிஞ்சிக்கொள்ள முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட சமயங்களில் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் உதவியாக இருக்கும். ஆனால், எந்த வயதில் எந்த விட்டமின் சப்ளிமெண்ட் எடுக்க வேண்டும் என்பது பலருக்கு குழப்பமாகவே இருக்கும். இந்தப் பதிவில் அதற்கான முழு விவரங்களைத் தெரிந்து கொள்வோம். 

குழந்தைகள்: குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் அவர்களுக்கு பல வைட்டமின்கள் மிகவும் முக்கியம். குறிப்பாக வைட்டமின் டி, கால்சியம், இரும்பு போன்ற வைட்டமின்கள் எலும்பு வளர்ச்சி, ரத்த சிவப்பணுக்கள் உருவாதல் போன்றவற்றிற்கு அவசியம். ஆனால், எல்லா குழந்தைகளுக்கும் சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படாது. குழந்தையின் உணவுப் பழக்கங்கள், ஆரோக்கிய நிலை போன்றவற்றைப் பொறுத்து சப்ளிமெண்ட்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கும். 

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் இருந்து கிடைத்துவிடும். 1-3 வயதில் குழந்தைகளுக்கு விட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் கொடுக்கலாம். 3-18 வயது உடையவர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின்கள் உணவுகளிலிருந்து கிடைக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு சில குறிப்பிட்ட விட்டமின் குறைபாடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி சப்ளிமெண்ட்ஸ் கொடுப்பது நல்லது. 

இளைஞர்கள்: இளைஞர்கள் பொதுவாக ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால், சில இளைஞர்களுக்கு சில குறிப்பிட்ட விட்டமின் குறைபாடு இருக்கலாம். குறிப்பாக இரும்பு, வைட்டமின் பி12 போன்ற விட்டமின்கள் இளைஞர்களுக்கு முக்கியம். 18-25 வயதில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரும்பு இழப்பு அதிகமாக இருக்கும். அதனால், இரும்பு சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கலாம். 25-30 வயதில் இளைஞர்கள் காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே விட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டிய தேவை இல்லை. 

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா? அப்படியென்றால் இந்த 7 ரொம்ப முக்கியம்!
Vitamin supplements

பெரியவர்கள்: வயது அதிகரிக்கும்போது உடலில் வைட்டமின்கள் உறிஞ்சும் திறன் குறையும். அதனால் பெரியவர்களுக்கு சில வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் கொடுக்க வேண்டியிருக்கலாம். 30-40 வயதில் பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் மெனோபாஸ் போன்ற காரணங்களால் வைட்டமின் குறைபாடு ஏற்படக்கூடும். 40-45 வயதில் எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகவும் முக்கியம். 50 வயதுக்கு மேல் வைட்டமின் பி12, வைட்டமின் டி, கால்சியம் போன்ற விட்டமின்கள் அனைவருக்குமே தேவைப்படும். 

முடிந்தவரை உணவின் மூலமாக எல்லா விட்டமின்களையும் பெறுவது சிறந்ததாகும். ஆனால், சில சமயங்களில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் கிடைக்காதபோது மருத்துவரின் ஆலோசனைப்படி விட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com