பெண்களை அதிகம் பாதிக்கும் 'லூபஸ் நோய்' என்றால் என்ன தெரியுமா? ஜாக்கிரதை! 

Lupus Disease.
Lupus Disease.
Published on

லூபஸ் என்னும் சொல் ஓநாய் என்ற பொருளை தரும் லேட்டின் சொல்லில் இருந்து உருவானது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் ஏற்படும் சிவப்பு நிற தடிப்புகள், ஓநாயின் தோலை போல தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது. லூபஸ் ஒரு தன்னூடல் நோய். அதாவது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தன்னைத்தானே தாக்கி உடலின் பல்வேறு உறுப்புகளை சேதப்படுத்தும் ஒரு நோய். இந்த நோய் பெரும்பாலும் இளம் பெண்களை அதிகம் பாதிக்கிறது. லூபஸ் நோயின் அறிகுறிகள் மிகவும் மாறுபட்டிருக்கும். இதனாலேயே இது ஒரு மர்ம நோய் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் இதன் அறிகுறிகள் வேறுபடலாம். 

லூபஸ் நோயின் காரணங்கள்: லூபஸ் நோய் ஏன் ஏற்படுகிறது என்பது இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், பின்வரும் காரணங்கள் இந்த நோயை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றன. 

குடும்பத்தில் லூபஸ் நோய் உள்ளவர்கள் இருந்தால் மற்றவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பதால், பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக வரக்கூடும்.

சூரிய ஒளி லூபஸ் நோயின் அறிகுறிகளை அதிகரிக்கும். சில மருந்துகள் இந்த நோயை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. மேலும் சில வைரஸ் தொற்றுகள் லூபஸ் நோயை ஏற்படுத்தக்கூடும்.

லூபஸ் நோயின் அறிகுறிகள்: 

  • தோல் பிரச்சனைகள். 

  • கால் விரல்கள். வெண்மையாக மாறுதல் 

  • மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம்.

  • தலைவலி, காய்ச்சல், சோர்வு. 

  • நுரையீரல் பிரச்சனைகள். 

  • சிறுநீரக பாதிப்பு. 

  • இதயப் பிரச்சினைகள். 

  • நரம்பு மண்டல பிரச்சனைகள்.

லூபஸ் நோய்க்கு இன்றுவரை குறிப்பிட்ட சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த நோயால் ஏற்படும் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், நோயின் பாதிப்பை குறைக்கவும் சில சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஸ்டெராய்டுகள், நோய் எதிர்ப்பு மருந்துகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் சிலர் வலி நிவாரணிகள் இதற்கு கொடுக்கப்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க Rose Water இருந்தால் போதுமே!
Lupus Disease.

லூபஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சூரிய ஒளியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன், தொப்பி போன்றவற்றை பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக உண்பது அவசியம். இத்துடன் தினசரி மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

லூபஸ் நோய் ஒரு சிக்கலான நோய். இதற்கான சிகிச்சை, நோயின் தீவிரத்தை பொறுத்து மாறுபடும். லூபஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதன் மூலம், இந்த நோயின் தீவிரத்தை நிர்வகிக்கலாம். இந்த நோயைப் பற்றி அறிந்தவர்கள் இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com