லெமன் ஜூஸ் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே சில தவறுகளை செய்கிறோம். அல்லது அவை தவறுகள் என்று தெரியாமலேயே செய்கிறோம். அந்தவகையில் லெமன் ஜூஸ் குடிக்கும்போது நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.
லெமன் ஜஸ் எளிதான முறையில் செய்து குடிக்கும் ஜூஸ் என்பதால் நிறைய பேர் வீட்டில் அடிக்கடி செய்து குடிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிக் குடிக்கும் ஜூஸ்களில் இதுவும் ஒன்று. இதில் வைட்டமின் சி இருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். அந்தவகையில் நாம் செய்யக்கூடிய தவறுகள் குறித்துப் பார்ப்போம்.
1. டயட்டில் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் லெமன் ஜூஸை குடித்து வருவார்கள். அது மிக மிகத் தவறு. சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது. இதனால், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வரக்கூடும். ஆகையால், காலையில் தண்ணீர் எடுத்துவிட்டு பிறகு லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
2. காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்துக் குடித்தால் நல்லதுதான். ஆனால், லெமன் ஜூஸ் வைத்து குடிக்கக்கூடாது.
3. லெமன் சாறில் சிறியளவு தண்ணீர் உற்றி, மிகவும் புளிப்பாக குடிக்கக்கூடாது. நிறைய தண்ணீர் ஊற்றித்தான் குடிக்க வேண்டும்.
4. அதேபோல், லெமன் ஜூஸை வைத்து சிலர் வாய் கொப்பளித்து இறுதியாக விழுங்குவர். அது கூடாது. லெமன் ஜூஸை குடித்துவிட்டு இறுதியாக தண்ணீரால் வாய்க்கொப்பளிக்க வேண்டும். இதனால், லெமனின் அமிலத்தன்மை பற்களை பாதிக்காது.
5. எலுமிச்சை சாறு உள்ளேதானே இருக்கிறது. வெளியில் பழத்தை கழுவுவதால் என்ன பயன் என்று யோசித்துவிட்டு பழத்தை சிலர் கழுவமாட்டார்கள். அது முற்றிலும் தவறு. பழத்தை கழுவிய பின்னரே லெமன் ஜூஸ் செய்ய வேண்டும்.
6. கடைகளில் லெமன் ஜூஸ் வாங்குவதை தவிருங்கள். அதாவது பாக்கெட்டுகளிலோ அல்லது பாட்டில்களிலோ இருப்பதை வாங்கி குடிக்காதீர்கள். அதற்கு பதிலாக பழத்தை வாங்கி வந்து வீட்டில் போட்டு குடியுங்கள்.
7. அதேபோல், லெமன் ஜூஸ் அதிகமாக குடிக்க வேண்டாம். நிறைய இருக்கிறது, நன்றாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக குடிப்பதும் ஆபத்தாகிவிடும். ஆகையால், தினமும் 2 அல்லது 3 க்ளாஸ் லெமன் ஜூஸ் குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம்.
லெமன் ஜூஸ் குடிக்கும்போது இனி இந்த விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு குடியுங்கள்.