தற்போது சியா விதைகள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. ஏனெனில், சோசியல் மீடியாக்களில் இது சார்ந்த பல தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதில் நார்ச்சத்து, ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் பிற உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால், உடல் எடை இழப்பு, செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு பல நன்மைகளை இது செய்கிறது. இருப்பினும், சியா விதை சார்ந்த விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை. அதுவும் இதை எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது பலருக்கு குழப்பமாகவே உள்ளது.
சியா விதைகளை எப்போது சாப்பிடக்கூடாது?
சோசியல் மீடியாக்களில் இன்புளுயன்சர்கள் கூறுவதைக் கேட்டு நீங்கள் இரவில் சியா விதைகளை சாப்பிட்டு வந்தால், உடனடியாக நிறுத்தி விடுங்கள். ஏனெனில், இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், இரவில் சாப்பிடும்போது செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால், தூக்கம் பாதிக்கப்பட்டு மறுநாள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
அதேபோல மதிய வேளையில் இவற்றை சாப்பிடுகிறீர்கள் என்றால், ப்ளீஸ் அப்போதும் வேண்டாமே. ஆமாங்க, மதிய வேளையில் இவற்றை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை வரும். இதனால், வயிற்றுப்போக்கு வயிற்று வலி ஏற்படலாம்.
காலையில் வெறும் வயிற்றிலும் தயவு செய்து இதை சாப்பிடாதீர்கள். இதில் உள்ள அமிலங்கள் வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும். இது காலப்போக்கில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. மருந்து உட்கொள்ளும் சமயங்களில் இவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில மருந்துகளின் செயல்பாட்டை இவை தடுக்கக்கூடும்.
இதுமட்டுமின்றி, விரைவில் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுகிறேன் என, அதிகமாக அள்ளி வாயில் கொட்டிக் கொள்ளாதீர்கள். எந்த உணவையும் அதிகமாக சாப்பிடுவது கெடுதலே. அதுவும் சியா விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு. இதனால், பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
அப்போ எப்போதான் சாப்பிடுறது?
சியா விதைகளை இரவே தண்ணீரில் ஊற வைத்தால் காலையில் அது ஜெல் போல மாறி இருக்கும். இதை காலையில் உணவுக்குப் பிறகு ஸ்மூர்த்தி, தயிர், ஓட்ஸ் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். முடிந்தவரை சியா விதைகளை காலை உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள். தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிடுவதே போதுமானது.