
நம் நாட்டில் பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளனர். தேநீரில் மசாலா தேநீர், இஞ்சி தேநீர், ஏலக்காய் தேநீர் ஆகியவற்றை விரும்பி குடிக்கிறார்கள்.நல்ல வாசனையையும் சுவையையும் கொண்டுள்ள ஏலக்காய் தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் சில உடல்நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் ஏலக்காய் தேநீரை குடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ஏலக்காய் டீ குடிக்க கூடாதவர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள்
ஏலக்காய் பித்தப்பையில் உள்ள கற்களை எரிச்சல் அடைய செய்வதோடு பித்தப்பையில் பிடிப்புகளை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கச் செய்யும் என்பதால் பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் ஏலக்காய் தேநீர் குடிப்பது நல்லதல்ல. சாதாரண தேநீர் அல்லது மூலிகை தேநீர் குடிப்பது பித்தப்பை கற்கள் இருப்பவர்களுக்கு சிறந்தது ஏலக்காய் தேநீர் குடிக்க விரும்பினால், மருத்துவரை அணுகுவது நல்லது.
2.கர்ப்பிணிப் பெண்கள்
கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் ஏலக்காயை கர்ப்பிணி பெண்கள் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. உணவில் ஏலக்காயின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, ஏலக்காய் டீயையும் தவிர்த்து விட வேண்டும்.மேலும் பாலூட்டும் தாய்மார்களும் ஏலக்காயை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
3.ஒவ்வாமை நோயாளிகள்
ஏலக்காய் தேநீர் குடித்தால், தோல் வெடிப்பு, அரிப்பு அல்லது சுவாசப் பிரச்சினைகள் போன்ற ஒவ்வாமை தொற்றுகள் இருப்பவர்கள் ஏலக்காய் தேநீரை குடிக்க கூடாது. ஏலக்காய் சாப்பிட்ட பிறகு அல்லது ஏலக்காய் தேநீர் குடித்த பிறகு ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் உங்கள் உடலில் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
4.நீரிழிவு நோயாளிகள்
ஏலக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஏற்கனவே ரத்த சர்க்கரையை குறைக்க மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது கூடுதலாக ஏலக்காய் தேநீரையும் குடித்து இதனால் அதிகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவது ஆபத்தை உண்டாக்கிவிடும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏலக்காய் டீ நல்லதல்ல. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஏலக்காய் தேநீர் குடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
5.இரத்த மெலிவு மருந்துகள்
இரத்த மெலிவு பண்புகளை இயற்கையாகவே ஏலக்காய் கொண்டுள்ளதால் இது இரத்தத்தை மெலிவுபடுத்துகிறது. ஏலக்காய் தேநீரை இரத்த மெலிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் குடிக்கும்போது இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே ரத்த மெலிவு நோய்க்கு மருந்துகளை உட்கொள்பவர்கள் எந்த மசாலாப் பொருட்களையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
மேற்கூறிய 5 நபர்களும் ஏலக்காய் டீ குடிப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)