சேற்றுப்புண் ஏன் வருகிறது? வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
Picasa

சேற்றுப்புண் ஏன் வருகிறது? வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

Published on

மைக்ரோஸ்போரம் (MICROSPORUM) என்ற ஒரு பூஞ்சை தொற்றால் கால் விரல்களுக்கு இடையில் சேற்றுப்புண் தோன்றுகிறது. இது அரிப்பு, புண் மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். தோல் வறண்டு செதில்கள் போன்ற தோற்றத்துடன் இது காணப்படும்.

சேற்றுப்புண் வருவதற்கான காரணங்கள்: ஈரமான, அசுத்தமான பாதம், சரியாக பராமரிக்கப்படாத நகங்கள் மூலமாக ஒருவருக்கு இந்தத் தொற்று ஏற்படுகிறது. வயலில் வேலை செய்வோர், நீண்ட நேரம் துணி துவைப்பவர்கள், ஈரமான இடத்தில் வேலை செய்வோருக்கும், வீட்டைச் சுற்றியுள்ள ஈரமான இடத்தில் வெறுங்காலுடன் நடத்தல், கால் விரல்களை நன்கு மூடி இருக்கும் வகையிலான காலணிகள் அணிந்து கொள்பவர்களுக்கு இந்தத் தொற்று தாக்கும். நீச்சல் குளங்கள் போன்ற பலரும் உபயோகிக்கும் இடங்களில் இந்தத் தொற்று அதிகமாகப் பரவும்.

வராமல் தடுக்க: நீண்ட நேரம் ஈரத்தில் வேலை செய்வதை குறைத்துக் கொள்ளுதல், வெளியே செல்லும்போது காலணி அணிவது போன்றவை முக்கியம். வீட்டிற்கு வந்ததும் சுத்தமாக கால்களைக் கழுவி, ஈரம் இல்லாமல் துடைக்கவும். சாக்ஸ் அணியும் முன்பு கால் விரல்களில் டஸ்டிங் பவுடர் போட்டு அதன் பிறகுதான் சாக்ஸ் போட வேண்டும். தினமும் சாக்ஸ்களை மாற்ற வேண்டும். துவைத்த சாக்ஸை நன்றாக வெயிலில் உலர்த்தி எடுக்கவும். பிறருடன் சாக்ஸை பகிர்ந்துகொள்ளக் கூடாது.

logo
Kalki Online
kalkionline.com