தயிரை ஏன் சூடாக்கி சாப்பிடக்கூடாது? 

Curd.
Curd.

நாம் ஏன் தயிரை சூடாக்கி சாப்பிடுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி சூடாக்கி சாப்பிட்டால் என்ன ஆகும்? வாருங்கள் இந்த பதிவு மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

நமது இந்திய உணவுகளில் தயிர் ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. ஏதாவது விருந்து என்றாலே இறுதியில் தயிரோ அல்லது மோரோ சேர்த்து சாப்பிட்ட பின்புதான் அது முடிவடையும். அந்த அளவுக்கு பல விதங்களில் தயிரை நாம் பயன்படுத்துகிறோம். மேலும் இந்தியாவில் பல இடங்களிலும் தயிர் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
முகப் பொலிவுக்கு தயிரை இப்படியும் பயன்படுத்தலாம்!
Curd.

தினசரி நம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதால் நமது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை வளர்க்க உதவுகிறது. இதனால் நம்முடைய செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படும். மேலும் தயிரில் அதிகப்படியான புரதச்சத்து இருப்பதால் அது நம்முடைய வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இதில் இருக்கும் பி12 விட்டமின் சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. 

தயிரை ஏன் சூடாக்கக் கூடாது?

சில ஆய்வுகளின் மூலமாக தயிரை சூடாக்குவது அல்லது சமைப்பதனால் அதன் சத்துக்கள் மற்றும் சுவையில் மாற்றம் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தயிரை சூடு படுத்தும்போது அதில் உள்ள தண்ணீர் வெளியேறி இறப்பதம் குறையும். இது தயிரை கெட்டியாக்கி அதன் சுவை மற்றும் அமைப்பை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. 

தையிரை சூடாக்கும்போது அதில் உள்ள புரதச்சத்துக்கள் சிதைவுறுகிறது. அதாவது புரதங்கள் விரிவடைந்து அதன் கட்டமைப்பு முற்றிலுமாக மாறி, ஊட்டச்சத்து மதிப்புகள் மாற்றம் காண்கிறது. ஆனால் சில சமயங்களில் தயிரை சூடாக்கும்போது அதில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் கொல்லப்படுகிறது. 

பெரும்பாலும் தயிரை சூடாக்கும் முறை யாருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில், வெப்பத்தால் தயிம் சுவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வித்தியாசமான சுவையை கொடுத்துவிடும். இது நாம் விரும்பும் சுவையை கொடுக்காது என்பதால் தயிரை பொதுவாகவே சமைப்பதில்லை. ஆனால் ஒரு சில உணவுகளில் சமைத்த தயிரின் சுவை அந்த உணவின் சுவையைக் கூட்டுகிறது என சொல்லப்படுகிறது. 

எனவே தயிரை சமைப்பதும் அப்படியே சாப்பிடுவதும் உங்கள் விருப்பம்தான். இது எளிதாக அப்படியே சாப்பிட்டாலும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தாத உணவு என்பதால், கட்டாயம் சமைக்க வேண்டும் என்ற அவசியத்திற்கு யாரும் தள்ளப்படுவதில்லை. குறிப்பாக இதை அப்படியே சாப்பிடும்போது சுவை நன்றாக இருப்பதாலேயே, மக்கள் நேரடியாக தயிரை ருசிக்கிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com