ஓ! இதனால்தான் வெற்றிலைக் காம்பை கிள்ளுகிறார்களா?

Betel leaf.
Betel leaf.

வெற்றிலையில், கற்பூர வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கருப்பு வெற்றிலை, சாதாரண வெற்றிலை என பல வகைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.

வெற்றிலையை எண்ணெயில் சூடாக்கி, சிறிய துணியில் மடித்து மார்பில் கட்டினால் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் நீங்கும். வெற்றிலை, மிளகு சேர்த்து காய்ச்சப்படும் கஷாயத்தைக் குடித்தால் சளி, இருமல் பிரச்னைகள் குணமாகும். மேலும், வெற்றிலை நம்முடைய நரம்பு மண்டலத்துக்கு பலம் சேர்ப்பதால், படிக்கும் வயதில் உள்ள குழந்தைகள் வெற்றிலைச் சாறை குடித்து வந்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். வெற்றிலையில் வாயுவை வெளித்தள்ளும் தன்மை இருக்கிறது. அத்துடன் இதயம், மண்ணீரல், மூளை, கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தி நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

வெற்றிலையில் அதிகப்படியான வைட்டமின்களும், நார்ச்சத்தும் இருப்பதால் உடல் இறுக்கம், குடல் புண்கள் போன்றவற்றை குணமாக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வெப்பத்தைத் தரும் இந்த வெற்றிலைக்கு தாய்ப்பாலை சுரக்க வைக்கும் ஆற்றலும் உண்டு. மேலும், வாய் துர்நாற்றத்தை போக்குகிறது, புற்று நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது, அஜீரணத்தை சரிசெய்து செரிமானத்தைத் தூண்டுகிறது, ஈறுகளில் உள்ள வலியை சரி செய்கிறது.

வெற்றிலை சாறில் நீர் மற்றும் பால் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். வெற்றிலையை மிதமாக சூடுபடுத்தி தலையில் வைத்தால், தலைவலி நீங்கும். இப்படி வெற்றிலை பலவிதங்களில் நமக்குப் பயன்படுகிறது. ஆனால், வெற்றிலையை பயன்படுத்தும்போது அதன் காம்பை கிள்ளி எரிவதை நாம் பார்த்திருப்போம். அது ஏன் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?

ஏனென்றால், காலாகாலமாக வெற்றிலையின் நுனியில் லட்சுமி தேவியும், நடுவிலே சரஸ்வதி தேவியும் அதன் காம்பில் மூதேவியும் உறைவதான நம்பிக்கை மக்களுக்கு உண்டு. இதன் காரணமாகவே வெற்றிலையைப் பயன்படுத்தும்போது அதன் காம்பை கிள்ளி வீசுவதாகச் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com