பனிக்கால உள்ளங்கை, விரல்கள் பராமரிப்பு!

winter season Hand and finger care
winter season Hand and finger care

னிக்காலத்தில் பொதுவாக உள்ளங்கைகளும் விரல் நுனிகளும் தோல் உரிந்து மிகவும் வறட்சியாகக் காட்சி அளிக்கும். அதை நடைமுறை வாழ்க்கையில் எப்படி தவிர்ப்பது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு உள்ளங்கை, விரல்கள், கால் விரல்களில், முழங்காலுக்குக் கீழ் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். இதனால் உடல் வறட்சி அடையாமல் தடுக்கலாம்.

1. துணி துவைக்க சோப்பைப் பயன்படுத்தாமல் பவுடரை பயன்படுத்தலாம். துணிகளை ஊற வைத்து பத்து நிமிடங்கள் கழித்து துவைத்து விடலாம். நீண்ட நேரம் சோப்பு நுரையில் கைகள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

2. கை கழுவ உபயோகப்படுத்தும் லிக்விட் சோப்பில் ஐந்து மடங்கு தண்ணீர் கலந்துதான் உபயோகிக்க வேண்டும். நிறைய பேர் அதை குறைந்த அளவு தண்ணீர் அல்லது  தண்ணீர் கலக்காமல் அப்படியே உபயோகிக்கும் வழக்கம் கொண்டிருக்கின்றனர். இது இவர்கள் கைவிரல் தோலையே அரித்துவிடும். லிக்விட் சோப்பிற்கு பதிலாக உடலுக்குக் குளிக்கும் சோப்பு சிறியதாகி விட்டால் அதை கை கழுவ உபயோகப்படுத்தினாலே போதும்.

இதையும் படியுங்கள்:
வாழைக்காயில் ஒளிந்துள்ள ரகசியம்!
winter season Hand and finger care

3. பாத்திரம் தேய்க்க சோப்பு அல்லது லிக்விட் தேவையில்லை. சாம்பல் அல்லது பவுடர் போதும். அதிலும் சிறிது நீர் சேர்த்துக் கொண்டு பாத்திரம் தேய்க்கலாம். பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் பிரஷ்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கம்பி பிரஷ் அல்லது துளைகள் உள்ள பிரஷ்களில் சோப்பு நுரை புகுந்து, கைகளில் பட்டு விரல்கள் பாதிப்படையும். இரண்டடுக்கு உள்ள ஸ்பாஞ்ச் வைத்த பிரஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். கைகளின் பக்கம் அந்த ஸ்பான்ஜ் இருக்க வேண்டும். கடினமான பகுதி பாத்திரத்தின் மேல் படுமாறு வைத்து உபயோகிக்க வேண்டும். பாத்திரம் தேய்க்கும் முன்பு கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு அதன் பின்பு தேய்த்தால் கை விரல்கள் மற்றும் உள்ளங்கைகள் தோல் உறிந்து போவதைத் தடுக்கலாம்.

4. வீடு துடைக்கும்போது நிறைய பெண்கள் செய்யும் பெரும் தவறு துடைக்கும் துணியை (மாப்பை) கைகளால் பிழிவதுதான். தரை துடைக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த தரை துடைப்பான்களில் மாப்பை முக்கி எடுத்த பின்பு அதை கைகளால் பிழியும்போது கை விரல்களும் உள்ளங்கைகளும் மிகுந்த பாதிப்பை அடையும். தற்போது மாப்பை அந்தக் குச்சியிலேயே வைத்து பிழியுமாறு மாடல்கள் வந்துவிட்டன. அதைப் பயன்படுத்தலாம். எந்தக் காரணம் கொண்டும் கைகளால் மட்டும் மாப்பைப் பிழிந்து விடக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com