கண் பார்வையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ம் தேதி உலகெங்கும் கண் பார்வை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் பார்வை இழந்து கஷ்ட்டப்படுகினறனர். அதற்கு முதல் காரணம் நம் உணவு முறைகள்தான். நம் தாத்தா, பாட்டி காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது. அதேநேரம் உணவு வகைகளைத் தாண்டி கண் பார்வை பாதிப்புக்கு சில காரணங்களும் உண்டு. ஆம்! அதிகநேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் போன் பயன்பாடு மற்றும் அளவுக்கு மீறி நீண்டநேரம் கண்களை கஷ்டப்படுத்தி படிப்பதால் கூட கண் பார்வை மங்குமாம்.
கண் பார்வை இழப்பு என்பது சுத்தமாக பார்வைத் தெரியாமல் பிறவியிலயே பார்வை மாற்றுத்திறனாளி இருப்பது ஒன்று. மற்றொன்று நம் வாழ்வியல் முறையால் கண்புரை (Cataract) ஆவது . இதுவே இன்றைய குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் வரை கண் பாதிப்பை உண்டாக்குகிறது. இதிலும் எட்டப்பார்வை கிட்டப்பார்வை என பிரித்து பாஸிட்டிவ், நெகட்டிவ் என பிரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டாவது விஷயத்தை கருத்தில்கொண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் அக் 12ம் தேதி உலக பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் கண் பார்வை பாதிப்பை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
கண் பார்வையை மேம்படுத்த ஐந்து முறைகள்:
உணவு முறை:
கேரட் , கீரை வகைகள், பாதாம் மற்றும் சிட்ரஸ் வகை பழங்கள் போன்ற விட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
கண் பார்வை பயிற்சிகள்:
கண்களின் மேல் விரல்களை வைத்து இரண்டு நொடிகள் வடது புறமும் இடது புறமும் மஸாஜ்போல் செய்ய வேண்டும். இதை தினமும் ஒரு ஐந்து முறை தொடர்ந்து செய்வதால் கண் பார்வை சரியாகும்.
சன்னிங் ( SUNNING ):
தினமும் காலை வெயிலை உடம்பில் வாங்கிக்கொண்டால் எவ்வாறு உடலுக்கு நல்லதோ. அதேபோல் காலை வெயிலில் கண்களை மூடிக்கொண்டு சூரிய ஒளியை வாங்குவதால் கண் பார்வை சீராக இருக்கும்.
பாமிங் முறை ( PALMING ):
பாமிங் எனபதும் ஒருவகை பயிற்சி முறைத்தான். உள்ளங்கையை கண்கள் உள்ள பகுதிகளில் வைத்துக்கொண்டு முழு கைகளால் முகத்தையும் மூடி ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு மெதுவாக மஸாஜ் செய்ய வேண்டும்.இதன் மூலன் கண்களுக்கு செல்லும் நரம்புகள் சீராக இருக்கும்.
பாதுகாப்பு கண்ணாடிகள்:
சிலர் விபத்தில் காயமடைந்து கண் பார்வையை இழக்கின்றனர். கண்ணாடி அணிவதால் கண்களைக் காயமடைவதிலிருந்து காப்பாற்றும். மேலும் தூசி நுன்னுயிர்கள் கண்ணுக்குள் செல்லாமல் தடுக்கும்.
இந்த முறைகளை தினமும் தவறாமல் பின்பற்றினால் எளிய முறையில் கண் பார்வையை சீராக வைத்துக்கொள்ளலாம்.
கணினியில் பணிப்புரிவோர் கண்பார்வைப் பற்றி கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
இன்று 90 சதவீதம் மக்கள் கணினியில் தான் வேலை செய்கின்றனர். நாள் முழுவதும் அதிலே இருப்பதால் கண் பார்வை சீக்கிரமாகவே பாதிப்படைகின்றது.
கண்ணாடி அணிவது 22 சதவீதம் கண் பார்வையை காக்க உதவி செய்யும்.பார்வை மங்கிய பின் 46 சதவீதம் மக்கள் கண்புரை சிகிச்சை மேற்கொள்வதால் தனது பார்வையை ஆரோகியமாக்கி வருமானத்தைக் கூட்டிகொள்கிறார்கள்.
பார்வை மங்கும் தொடக்க நிலையிலேயே 22 சதவீதம் துள்ளியமான பார்வை இழக்க நேர்கிறது.
இன்று 90 சதவீதம் கண் பார்வை இழப்பு குணப்படுத்தக்கூடியதாகத்தான் உள்ளது. மேலும் கணக்கெடுப்பின்படி 160.7 மில்லியன் மக்களுக்கு பார்வை மங்குவது வேலைக்கு செல்லும் வயதில்தான்.
கண் பார்வை சீராக வைத்துக்கொள்ள தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். ஏற்கனவே பாதித்தது என்றால், உடனே மருத்தவரின் ஆலோசனைகளைப்பெற்று கண் பார்வைக் காத்துக்கொள்வோம்.