மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

மஞ்சள் காய்ச்சல்
Yellow Feverhttps://www.scientificanimations.com

ப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) பரவியுள்ளது. அதன் அறிகுறிகளும் மற்றும் தடுப்பு முறைகளும் குறித்து மக்கள் அனைவரும் அறிய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

மஞ்சள் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?

மஞ்சள் காய்ச்சல் என்பது பகலில் அதிகம் கடிக்கும் கொசுக்களால் பரவும் ஒரு தொற்று நோயாகும். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட கொசு ஒரு மனிதரை கடித்தால் அவருக்கு மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் மஞ்சள் காய்ச்சல் வரலாம். ஆனால், வயதானவர்களுக்கு கடுமையான தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகள்:

பலர் இந்நோயின் அறிகுறிகளை அனுபவிப்பதில்லை. காய்ச்சல், தசை வலி, தலைவலி, பசியின்மை, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும். இதை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

நிலை 1 (தொற்று): தலைவலி, தசை மற்றும் மூட்டு வலிகள், காய்ச்சல், சிவத்தல், பசியின்மை, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை பொதுவானவை. அறிகுறிகள் பெரும்பாலும் 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு சுருக்கமாக மறைந்துவிடும்.

நிலை 2 (நிவாரணம்): காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் நீங்கும். பெரும்பாலான மக்கள் இந்தக் கட்டத்தில் குணமடைவார்கள். ஆனால் 24 மணி நேரத்திற்குள் சிலருடைய உடல் நிலை மோசமாகலாம்.

நிலை 3: இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உட்பட பல உறுப்புகளில் சிக்கல்கள் ஏற்படலாம். இரத்தப்போக்கு கோளாறுகள், வலிப்பு, சிறுநீர் கருமையாக மாறுவது, வாந்தி, கோமா மற்றும் மயக்கம் போன்றவையும் ஏற்படலாம்.

சிகிச்சை: இந்நோயாளிகள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடித்து. உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காய்ச்சலை ஆரம்ப கட்டங்களில் கண்டறிவது கடினம். இது மலேரியா, இரத்தக் கசிவு காய்ச்சல், லெப்டோஸ்பைரோசிஸ், டெங்கு போன்றவற்றுடன் தொடர்புள்ளதால் கடுமையான குழப்பம் ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
உங்க குழந்தை பிளே ஸ்கூலுக்கு போகத் தயாரா? அப்படியென்றால் இதையெல்லாம் கவனத்துல வைச்சுக்குங்க!
மஞ்சள் காய்ச்சல்

தடுப்பு முறைகள்: மஞ்சள் காய்ச்சலைத் தடுப்பதற்கான மிக முக்கியமான வழிமுறை தடுப்பூசி. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி பாதுகாப்பானது, மலிவானது மற்றும் ஒற்றை டோஸ் மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு எதிராக வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குகிறது. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையில்லை. தடுப்பூசி போடப்பட்ட 80 முதல்100 சதவிகித மக்களுக்கு 10 நாட்களுக்குள் பயனுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஎஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும். எனவே. குழந்தைகளுக்கு கை கால்களை மறைத்து நீளமான ஆடைகளை அணிவிக்க வேண்டும். கொசுவலை பயன்படுத்துவது நல்லது. கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம்.

யாருக்கெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது?

ஒன்பது மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், எச்ஐவி எய்ட்ஸ் அல்லது பிற காரணங்களால் கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ்கள் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com