இந்த உணவுகளை டன் கணக்கில் சாப்பிட்டாலும் உங்களுக்கு தொப்பை போடாது! 

Zero calorie foods
Zero calorie foods

இன்றைய காலத்தில் எடை இழப்பு என்பது பலருக்கு ஒரு முக்கியமான இலக்காக உள்ளது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி முறையை பின்பற்றினால் உடல் எடை குறைப்பு சாத்தியம்தான் என்றாலும், அதற்கு எதுபோன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் இப்பதிவில் Zero கலோரி உணவுகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். அதாவது எந்த உணவில் கலோரிகளே இல்லை அல்லது மிகக் குறைந்த கலோரிகள் உள்ளனவோ அவைதான் ஜீரோ கலோரி உணவுகள். இந்த உணவுகள் உங்களுக்கு தேவையான நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொடுக்கும். அதே நேரத்தில் அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைக்கின்றன. 

ஜீரோ கலோரி உணவுகள்: 

  • பழங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் அவற்றை டன் கணக்கில் சாப்பிட்டாலும் உங்களுக்கு தொப்பை போடாது. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், நீங்கள் தேவையில்லாமல் அதிக உணவை சாப்பிட மாட்டீர்கள். 

  • பருப்பு வகைகள்: பருப்பு வகைகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. அவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். 

  • ஓட்ஸ்: நீங்கள் உடல் எடையைக் குறைக்கப் போராடுகிறீர்கள் என்றால் தினசரி காலையில் ஓட்ஸ் மீல் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு தினசரி தேவையான ஆற்றலை வழங்கி, உடல் எடை குறைப்புக்கு பெரிதளவில் உதவும். மேலும், இதில் குறைந்த அளவே கலோரி இருப்பதால், யார் வேண்டுமானாலும் தாராளமாக உட்கொள்ளலாம். 

  • வெள்ளரி: வெள்ளரிக்காய் ஒரு புத்துணர்ச்சூட்டும் காய்கறி. இதில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரி மட்டுமே உள்ளது. 

  • முட்டைகோஸ்: 100 கிராம் முட்டைக்கோஸில் 20 கிராம் கலோரிகளுடன் குறைந்த கொழுப்பும் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் சைடர் வினிகரின் 5 ஆரோக்கிய நன்மைகள்! 
Zero calorie foods
  • ஸ்ட்ராபெரி மற்றும் ஆப்பிள்: தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்பார்கள். ஆப்பிள் ஒரு நார்ச்சத்து நிறைந்த பழமாகும். இது நீண்ட நேரம் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்க உதவும். மேலும் ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், உடல் எடை குறைப்புக்கு ஒரு சிறந்த பழமாகும். 

ஜீரோ கலோரி என்றதும் அவற்றில் சுத்தமாக சத்துக்களே இல்லை என நினைக்க வேண்டாம். அவற்றின் அளவைவிட கலோரி உள்ளடக்கம் மிகவும் குறைவாக இருப்பதையே ஜீரோ கலோரி உணவுகள் என்பார்கள். இந்த வகையான உணவுகளை நீங்கள் தினசரி சாப்பிடுவதால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை பராமரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com