செரிமான பிரச்னைகளை சரிசெய்யும் சுரைக்காய்!

Zucchini cures digestive problems
Zucchini cures digestive problems
Published on

சுரைக்காயில் அதிக அளவில் நீர்ச்சத்து உள்ளது. மேலும், இரும்புச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், அதிக அளவில் பொட்டாசியம், குறைந்த அளவு சோடியம் போன்ற பல சத்துகள் உள்ளன.

சுரைக்காய் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சுரைக்காய் பித்தத்தை போக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. சிறுநீர் கோளாறுகளையும் சரிசெய்கிறது.

சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம்  சமநிலைப்படும்.

வெப்பத்தால் ஏற்படும் தலைவலியை போக்க சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்தால் தலைவலி சரியாகிவிடும். சுரைக்காய்  நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு, உடலுக்கு பலத்தையும் கொடுக்கிறது. குடல்புண் போன்றவற்றை சரிசெய்வதோடு இரத்தத்தையும் சுத்தப்படுத்தம் தன்மையை கொண்டுள்ளது.

சுரைக்காய் கொடியை பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது அந்த கொடியை நீரில் காய்ச்சி குடித்து வந்தாலோ உடலில்  தங்கிய நீரை வெளியாக்கி உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. மூலம் நோய் உள்ளவர்களுக்கு இந்த சுரைக்காய் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இருமினால், தும்மினால் வெளிப்படும் சிறுநீர் பிரச்னைக்கு என்ன செய்வது?
Zucchini cures digestive problems

சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததாலும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான பிரச்னைகளையும் சரிசெய்கிறது. சுரைக்காய் கொடி, நீர்முள்ளி மற்றும் வெள்ளரி விதை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அதை நீரில் நன்கு காய்ச்சி நீர் பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வந்தால் நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை சரியாகிவிடும்.

சுரைக்காய் சாறு காது வலியை போக்குகிறது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகிறது. பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும் ஆற்றலையும் இது கொண்டுள்ளது. சுரைக்காய் இலையுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால்  மஞ்சள்காமாலை சரியாகிறது.

பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு  சுரைக்காய் சிறந்த மருந்தாகும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com