0,00 INR

No products in the cart.

யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்

ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான “ஏ1, பாரீஸ் ஜெயராஜ்”, படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு “மெடிக்கல் மிராக்கல்” என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே.

இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழுவினராக
இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா, எடிட்டிங் – தமிழ்குமரன், கலை இயக்கம் – ராஜா A, பாடல்கள் – ரோகேஷ், நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் V, தயாரிப்பு மேற்பார்வை – கே.ஆர்.பாலமுருகன், மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள “மெடிக்கல் மிராக்கல்” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

yoga day

எல்லாம் தரும் வரம் யோகா

0
இந்தியாவின் மிக அறிய பொக்கிஷமாக கருதப்படுகிறது யோகா. யோகாவால் எண்ணிலடங்கா உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது இப்போது பலருக்கும் தெரிந்துள்ளது.இந்தியா மட்டும் இல்லாமால் வெளிநாடுகளில் கூட தற்போது யோகா கலையை மிகவும் பரவலாக பயன்படுத்தி...
studies after 12th

என்ன படிக்கலாம்…எங்கு படிக்கலாம்?

0
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்த மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பிக்கும் முன், அவர்களை முழுவதும் ஆட்கொண்டுள்ளது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்.  மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்து வந்த நிலைமாறி,...
veetla vishesham movie

“வீட்ல விசேஷம் ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படம்” – ஆர்.ஜே.பாலாஜி

0
குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள...
dance master chinna

200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா மரணம்

0
முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா...
divya movie poster

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகும் “திவ்யா”

0
நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லராக உருவாகி வருகிறது, “திவ்யா”. தமிழில் இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை. இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர்...