யூடியூப் பிரபலம் டாடி ஆறுமுகத்தின் மகன் ரகளை: போலீஸ் வழக்குப் பதிவு!

யூடியூப் பிரபலம் டாடி ஆறுமுகத்தின் மகன் ரகளை: போலீஸ் வழக்குப் பதிவு!
Published on

பிரபல யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் புதுச்சேரியில் குடிபோதையில் ரகளை செய்ததால் போலிஸார் அவர் உட்பட 3 பேர் மீது பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி போலீஸார் தெரிவித்ததாவது:

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ளது ஏகே டார்வின் உணவகம். இந்த உணவகத்தில் நேற்றிரவு யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத், அவரது நண்பர்களான ஜெயராம் மற்றும் தாமு ஆகிய 3 பேர் வந்து மதுபானத்துக்கு ஆர்டர் செய்தனர். ஆனால், அங்கிருந்த ஊழியர் இரவு 11 மணி ஆகிவிட்ட காரணத்தால் மது தர மறுக்க, கோபிநாத்தும் அவர் நண்பர்களூம் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து கோபிநாத் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடமும் கோபிநாத் வாக்குவாதம் செய்துள்ளார். அவர்களை எச்சரித்த போலீஸார், காவல்நிலையத்திற்கு வருமாறு சொல்லிச் சென்றனர். ஆனால் கோபிநாத் உள்ளிட்ட மூவரும் தலைமறைவாகியுள்ளதால், போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் ஃபுட் பேக்டரி எனும் யூடியூப் சேனல் மிகப் பிரபலம் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com