கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்

Published on

கருத்து, ஓவியம் : தேவா

“தண்ணியில நனைச்சா கொஞ்சம் சுருங்கலாம்னு சொன்னீங்க, என்னங்க இது?”

“சும்மா ஏறி வாங்க சார், வாஸ்துப்படி கட்டிய ‘வாசல் இல்லாத’ கட்டடம். ஜன்னல் வழியா குதிக்கணும். ஆனா, உள்ளே இடம் ரொம்ப விசாலமா இருக்கும்.”

“மழைநீர் வீட்டைச்சுத்தி தேங்கும்போது கவலை வேணாம் சார். இந்த மிஷினை வாங்கிக்குங்க. ஒரு சுவிட்சை தட்டினா தண்ணீரை உறிஞ்சி ஆவி யாக்கி மேலே அனுப்பிடும்.”

“இது 'போட் கார்' சார். ரோடுல மழைநீர்  வெள்ளமா ஓடும்போது, கார் சக்கரத்தை உள்ளிழுத்துவிட்டு, படகா  பயன்படுத்தலாம்.”

“மழைநீர் வடியாத தெருக்கள் பற்றிக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினருக்கு என் ஒரே பதில். அந்தத் தெருக்கள் இனி ‘கால்வாய்கள்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.

“சுயேச்சையா நின்னு எப்படி ஜெயிச்சீங்க?”

“என் சொந்த செல்வாக்காலேதான்.”

“அப்படின்னா, உங்க ஏரியால நீங்க பிரபலம்னு சொல்லுங்க.” 

“அதெல்லாம் இல்லை. என் சொந்த செல்லுல பேசி வாக்கு சேகரிச்சேன்.”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com